Home அரசியல் தமிழகத்தின் அரசியல் குழப்பங்களுக்கு புதிய ஆளுனர் முடிவு கட்ட வேண்டும் அன்புமணி  அறிக்கை

தமிழகத்தின் அரசியல் குழப்பங்களுக்கு புதிய ஆளுனர் முடிவு கட்ட வேண்டும் அன்புமணி  அறிக்கை

14
0
SHARE

சென்னை, அக். 1&

தமிழகத்தின் அரசியல் குழப்பங்களுக்கு புதிய ஆளுனர் முடிவு கட்ட வேண்டும் என பா... இளைஞரணித் தலைவர் அன்புமணி  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தின் புதிய ஆளுனராக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் ஆளுனராக பணியாற்றியவருமான பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதிய ஆளுனருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் ஆளுனராக பணியாற்றிய ரோசய்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்றநிலையில், அதன் பின்னர் ஓராண்டும், ஒரு மாதமும் கழிந்த பின்னர் இப்போது தான் தமிழகத்திற்கு புதிய ஆளுனர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இந்திய விடுதலைக்கு பிறகு தமிழகத்தின் ஆளுனர் பதவி இவ்வளவு காலம் காலியாக இருந்தது இதுவே முதல்முறையாகும்.

தமிழகஆளுனர்பதவிகாலியாகஇருந்தகாலத்தில்தமிழகஅரசுநிர்வாகம்கடிவாளமில்லாதகுதிரையாகபயணித்துக்கொண்டிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு பெரும்பான்மையை இழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், அந்த சட்டவிரோத அரசு தடையின்றி செயல்பட அனுமதிகப்பட்டிருக்கிறது.  அதிக காலம் பதவியில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பினாமி அரசு தமிழக அரசு வளங்களையும், இயற்கை வளங்களையும் முழு வீச்சில் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் தமிழ்நாடு என்ற மாநிலத்தை கடன் கொடுத்த அமைப்புகளிடம் அடகு வைக்கும் அவல நிலை ஏற்பட்டு விடும்.

புதியஆளுனராகநியமிக்கப்பட்டுள்ளபன்வாரிலால்புரோகித்சட்டப்பேரவைஉறுப்பினர், மக்களவை உறுப்பினர், மராட்டிய மாநில அமைச்சர், ஆளுனர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர்.

அந்த அனுபவங்களின் உதவியுடன் தமிழகத்தில் நிலவும்குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில்எடப்பாடிதலைமையிலானபினாமிஅரசுபெரும்பான்மைஇழந்தநாள்முதல்எடுக்கப்பட்டகொள்கைமுடிவுகள்அனைத்தையும்புதியஆளுனர்ரத்துசெய்யவேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம்,  நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தமிழக அரசு எந்த கொள்கை முடிவுகளையும் எடுக்காமல் காபந்து அரசாக மட்டுமே செயல்படும்படி முதல்வருக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here