Home சம்பவம் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட குழந்தை பொதுமக்கள் போராடி மீட்டனர்

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட குழந்தை பொதுமக்கள் போராடி மீட்டனர்

21
0
SHARE

திருத்தணி, அக். 1&

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட இரண்டரை வயது குழந்தையைப் பொதுமக்கள்  போராடி  மீட்ட சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது, இரண்டரை வயது மகள் விஜயஸ்ரீ. நேற்று காலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், நீண்டநேரம் ஆகியும் வராததால் பெற்றோர் தேடிப்பார்த்துள்ளனர்

விஜயகுமார், வீட்டருகே கடந்த ஓராண்டுக்குமுன் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 80 அடி ஆழ்துளை கிணற்றுப் பக்கவாட்டில் கடந்த சில நாட்களாக பெய்தமழையால் துளை ஏற்பட்டுள்ளது. அந்தத் துளையில் குழந்தை விஜயஸ்ரீ சிக்கிக்கொண்டுள்ளது பின்னர் தெரியவந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு குழந்தையை நீண்டநேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை பயன்பாடில்லாமல் இருந்ததை மூடாமல் இருந்ததே இந்த நிகழ்வுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.