Home சம்பவம் அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி

அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி

7
0
SHARE

செங்குன்றம், அக். 1&

சென்னை அடுத்த அம்பத்தூர் கல்யாணபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாம்ராஜ். இவர் அம்பத்தூர் எஸ்டேடில் உள்ள ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷீபா. இவர்களுக்கு பெனிதா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. இவருக்கு கடந்த 10 நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெனிதா சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெனிதாவின் உறவினர்கள் கூறும்போது டெங்கு காய்ச்சலால் சிறுமி இறந்ததாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here