Home தமிழகம் திருமழபாடி சிவாலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

திருமழபாடி சிவாலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

11
0
SHARE

அரியலூர், அக். 1 &

திருமழபாடி சிவாலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருமழபாடியில், சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதசாமி கோயில் உள்ளது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது.

திருமழபாடியை சேர்ந்த வி.நடராஜ அய்யரால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கி வைக்கப்பட்ட நவராத்திரி விழா, ஸ்ரீசாரதா நவராத்திரி ஆராதனை விழா அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலெக்ஷ்மியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் இருந்து உலகை ரக்ஷிக்கும் அம்பாள், ஒன்பது நாட்கள் ஊசி முனையில் தவமிருந்து, 10வது நாள்  மஹிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை காப்பாற்றினாள் என்பது ஐதீகம்.அதன்படி திருமழபாடி வைத்தியநாதசாமி திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பிராமண சத்சங்க குழுவினர் சார்பில், தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்பட்ட நவராத்திரி உற்சவத்தில், சுந்தராம்பிகை அம்மன் தபஸ் கோலம், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீகாமாட்சி, மதுரை  மீனாட்சி, காசி விசலாட்சி, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீதுர்க்கை, சிவலிங்க பூஜை செய்யும் அம்பாள், ஸ்ரீதனலெட்சுமி, ஸ்ரீசரஸ்வதி என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் திருவீதி உலா நடத்தி, மகா ஆரத்தி உள்பட பல்வேறு வழிபாடுகள் செய்யப்பட்டது.பக்தி சிரத்தையுடன் தொடர்ந்து 10 நாட்கள், கோலாகலமாக நடத்தப்பட்ட இந்த நவராத்திரி விழா உற்சவத்தின் உபயதாரர்களாக, திருமழபாடி வி.நடராஜ அய்யர் குடும்பத்தினர், சென்னை முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினர், திருமழபாடி பொதுப்பணித்துறை ஊழியர்கள், திருமழபாடி முரளீதரன் பிரதர்ஸ், விநாயகமூர்த்தி பிரதர்ஸ், அன்னிமங்கலம் வெங்கடேசன், ரெங்கநாத தீட்சிதர், சாமிநாதன் குடும்பத்தினர், கோவை ஹரிஹரன் குடும்பத்தினர், திருமழபாடி கே.ரெங்கநாதன் குடும்பத்தினர், சென்னை ராமதாஸ் குடும்பத்தினர், சென்னை வெங்கட்ராமன், தியாகராஜ குருக்கள், மீனாட்சிசுந்தரம் குடும்பத்தினர், சென்னை ராமச்சந்திரன் குடும்பத்தினர், ஸ்ரீரங்கம் வைத்தியநாத சர்மா குடும்பத்தினர் உள்ளிட்டோர் செயல்பட்டனர்.

தொடர்ந்து 30ம் தேதி நேற்று காலை, பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மாலையில் ஸ்ரீசந்திரசேகரர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு எய்து வதம் செய்யும் உற்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவடைந்தது. திருமழபாடி சிவாலயத்தில் 10 நாட்களும்நடைபெற்றஇந்தநவராத்திரிவிழா

உற்சவத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இறைவழிபாடு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here