Home தமிழகம் புதுச்சேரி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் விஜயதசமி விழா

புதுச்சேரி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் விஜயதசமி விழா

16
0
SHARE

புதுச்சேரி, அக்.1&

ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும் ஹயக்ரீவர் பெருமாள் குருவாக இருந்து தனது சிஷ்யை சரஸ்வதி தேவிக்கு உபதேசம் செய்து அருளிய விஜயதசமி நாளன்று குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்குவதை பெற்றோர்கள் விசேஷமாக கருதுவதால் பலர் தங்கள் குழந்தைகளை இந்த நல்ல நாளில் பள்ளிகளில் சேர்க்க விரும்புகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, இராமகிருஷ்ணா நகரில் பிரசித்திப்பெற்ற ஹயக்ரீவர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமியையட்டி பள்ளிகளில் புதிதாக சேரும் குழந்தைகளின் கையை பெற்றோர் பிடித்து நெல் மணிகளால் வித்யாரம்பம் (கல்வி தொடக்கம்) என்று எழுதும் நிகழ்ச்சி ஹயக்ரீவர் கோவில் பெருமாள் சன்னதியில் நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

இதையட்டி ஹயக்ரீவர் கோவிலில் விசேஷ பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.