Home இந்தியா டெல்லி ராம்லீலா மைதானத்தில் தசரா விழாகுடியரசுத்தலைவர், பிரதமர் பங்கேற்பு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் தசரா விழாகுடியரசுத்தலைவர், பிரதமர் பங்கேற்பு

6
0
SHARE

புதுடெல்லி, அக. 1&

நாடு முழுவதும் தசரா பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு வருடமும் தில்லியில் உள்ள செங்கோட்டையில் அமைந்திருக்கும் ராம்லீலா மைதானத்தில் தரசா பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். அவ்வகையில் நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான நேற்று தசரா பெருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது, ராவணனை ராமர் வதம் செய்வதை நினைவூட்டும் விதமாக அனைத்தும் நடைபெறும். குறிப்பாக ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைத்து ஏரிப்பது வழக்கம்.

இதனால்நாட்டில்உள்ளதீயசக்திகள்வதம்செய்யப்பட்டுநன்மைவிளையும்என்பதுநம்பிக்கை.

இந்நிலையில், ராம்லீலா மைதானத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவிற்கு வந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

விழா மைதானத்தில் ராமர், லட்சுமணர் மற்றும் அனுமன் உருவமிட்டவர்கள் இருந்தனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.இதன்பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த 90 அடி ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது.

இந்ததீயில்அந்தஉருவபொம்மைமுற்றிலும்சாம்பலானது. இதனையடுத்து ராமர் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here