Home சம்பவம் டி.டி.வி.தினகரன் கொடும்பாவி எரிப்பு

டி.டி.வி.தினகரன் கொடும்பாவி எரிப்பு

8
0
SHARE

தங்கவயல், அக். 1&

கோலார் தங்க வயலில் ,டி.டி.வி.தினகரன் மற்றும் புகழேந்தி ஆகியோரின் கொடும்பாவிகளை கர்நாடக அதிமுகவினர் எரித்து ஆர்பாட்டம் செய்தனர்.

தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை சுராஜ் மல் சதுக்கத்தில் கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்க செயலர் மு.அன்பு தலைமையில் அதிமுகவினர் கூடினர்.அங்கிருந்து கட்சி கொடிகளுடன் ஊர்வலமாக கிளம்பி முக்கிய வீதிகள் வழியாக காந்தி சதுக்கத்தை அடைந்தனர்.

அங்கு மு.அன்பு பேசும் போது ,’கட்சி தலைவி ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்ட தினகரன் மற்றும் அவருடைய கைக்கூலியாக புகழேந்தி ஆகியோர் நாளரு பொய்களை கூறி கொண்டு ,எக்கு கோட்டையாக திகழும் அதிமுகவை அழிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகினறனர்.கட்சியில் எந்த பதவியிலும் ,அதிகாரத்திலும் இல்லாத இவர் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது கேலிக்கூத்து.அத்துடன் எம்.எல்..க்களை சிறை பிடித்து கர்நாடக குடகுவில் அடைத்துவைத்திருப்பது ,சட்டம்,ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.உடனே மாநிலத்தை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும்.”என்றார்.

பின்னர் டி.டி.வி.தினகரன்,மற்றும் புகழேந்தி ஆகியோரின் கொடும்பாவிகள்எரிக்கப்பட்டன.நிகழ்ச்சியில்கே.ஆர்.கிருஷ்ணராஜ்,வி.விஜயன்,எஸ்..சிவசண்முகம்,ரங்கசாமி,அனிதா பிரியா ,பழக் கடை கதிரவன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here