Home தமிழகம் கல்லைப்போட்டு வாலிபர் கொலை பைக்கை அடமானம் வைத்து மோசடி செய்ததால் தீர்த்துக் கட்டினோம் ...

கல்லைப்போட்டு வாலிபர் கொலை பைக்கை அடமானம் வைத்து மோசடி செய்ததால் தீர்த்துக் கட்டினோம் கைதான 3 பேர் வாக்குமூலம்

5
0
SHARE

சென்னை, அக்,1

சென்னை, எம்.கே.பி. நகர் பகுதியில், ஆட்டுக்கல்லை தலையில் போட்டு, வாலிபரை கொன்ற வழக்கில், 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். பைக்கை அடமானம் வைத்து மோசடி செய்ததால் கொன்றோம் என  கைதானவர்கள் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.

சென்னை, எம்.கே.பி. நகர், மேற்கு பகுதி, 15 வது தெருவை சேர்ந்தவர் கணேசன்(48), இவர், மாநகர அரசு பேருந்து ஓட்டுநர், இவரின் மகன் சுரேஷ்(24), இவருக்கு, வேலைக்கு போகாமல், நண்பர்களுடன் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வியாழன் கிழமை அன்று, இரவு 11.30 மணியளவில், நண்பர் ஒருவர் அழைத்ததாக வீட்டை விட்டு சுரேஷ் வெளியில் சென்றுள்ளார்.  அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல்,  கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால், சுரேசை சரமாரியாக வெட்டி தாக்கினர்.  இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். பின்னர், அந்த கும்பல், ஆட்டுக்கல்லை எடுத்து, சுரேஷ் தலையில் போட்டு கொடூரமாக கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர்.தகவல் கிடைத்து, விரைந்து வந்த எம்.கே.பி. நகர்  காவல் நிலையம் , சுரேஷ் உடலை கைப்பற்றி , பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, வழக்குபதிவு செய்த , எம்.கே.பி. நகர் போலீசார் , கொலை சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். மேலும், விசாரணையில், கொல்லப்பட்ட சுரேஷ் மீது,  அடிதடி வழக்குகள்  ஐந்துக்கும் மேற்பட்டது இருப்பது தெரியவந்தது.  தொடர்ந்து நடத்திய விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு,   அதே பகுதியை சேர்ந்த  யுவராஜ் என்பவரின் பைக்கை அடமானம் வைத்து, பணம் பெற்று சுரேஷ் மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அது தொடர்பாக, யுவராஜ் கேட்க சென்றபோது, சுரேஷ் அவரை அடித்து உதைத்துள்ளார். இந்த தகராறில் தான் , சுரேஷ் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கொலை வழக்கு தொடர்பாக, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த வல்லரசு(24), சரண்ராஜ்() எலி சரண்ராஜ்(26),கோபிநாத்(23) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள், போலீசிடம், யுவராஜ் பைக்கை அடமானம் வைத்து விட்டு மோசடி செய்தார். அதை கேட்க சென்றால் , எங்களையும் அடித்து, அவமானப்படுத்தினார்.

இதனால், ஆத்திரத்தில் இருந்த நாங்கள், அன்று இரவு, சுரேசை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து, அவரை தீர்த்துகட்டியதாக போலீசில் வாக்குமூலமாக கொடுத்ததாக தெரிகிறது. மேலும், முக்கிய நபரான யுவராஜ் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.