Home தலையங்கம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா இந்திய பொருளாதாரம்…?

வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா இந்திய பொருளாதாரம்…?

22
0
SHARE

உலக நாடுகளில் இந்தியா வளர்ந்து வரும் பட்டியலில் இருந்தாலும், இன்னும் வீழ்ச்சியில் இருக்கிறதென்று தான் சொல்லவேண்டும்.மற்ற நாடுகளை விட இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்குநாள் குறைந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் சார்ந்துள்ளது, மக்கள்பொருளாதாரம் முன்னேறும் போதுதான், ஒரு நாட்டின் வளார்ச்சி பூர்த்தி அடையும். இதில் முக்கிய பங்கு வகிப்பது அரசியல்தலைவர்கள்தான். மத்திய மற்றும் மாநில அரசு பதவிகளில் இருப்பவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடாத வரைஇந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்பது எட்டாக்கனிதான். பொருளாதார முன்னேற்றம் பின்னடைவில் இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான மதிப்பு தினந்தோறும் அல்ல, மணிக்கொரு முறை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தண்ணீர் முதல், பகுத்தறிவை அளிக்கும் கல்விவரை அனைத்தும் பண மயமாகிவிட்டது. ஆனாலும் பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை என்பது அரசியலில் இருக்கும். ஓட்டைகளையே சுட்டிக்காட்டுகிறது.மாநில அரசுகள் முறையாக இருந்தாலும், மத்திய அரசு சரியாக இல்லை என்றால், ரூ. 70 ல் இருக்கும் பெட்ரோல்விலை ரூ.100 ஆனாலும் கவலை கொள்வதற்கில்லை. தலைமை சரியில்லை என்றால், அதன் கீழ் செயல்படுபவர்கள் எப்படி சரியானவர்களாய் இருக்க முடியும்?. ஐந்தாண்டுக்கு ஒரு முறை மத்திய, மாநில அரசுகள் மாறும் போது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு அதிகரித்திருக்கிறது என்பதை கருத்தில் கொண்டுதான் உலக நாடுகள் , தன்னுடைய அடுத்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

ஆனால் இந்தியாவில் மட்டும் தான் அவரவர் ஆட்சிமுறையில் நடந்த ஊழல்கள் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது.இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.இந்நிலையில் இன்றைய மத்திய அரசின் ஆட்சி பற்றிய தன் கருத்தை , இதற்கு முன்பு அந்தக் கட்சியில் இருந்ததலைவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்திருந்தார். இது அக்கட்சி தலைவர்களுக்கு மட்டுமல்லாமல், பொது மக்களிடையேயும்மத்திய அரசு பற்றிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் மத்திய அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது, இங்கு யாரும் கணிக்கமுடியாததே.மக்களின் கருத்துக்கு சுதந்திரம் அளிக்கும் இந்தியாவில், இனியாவது மத்திய அரசு தன் ஆட்சிமுறையில் உள்ள ஓட்டைகளைசரிசெய்தால் மக்களின் பொருளாதாரம் முன்னேறும், அதன் பின் இந்தியாவின் பொருளாதாரம் தானாக உயர்ந்துவிடும்.பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தைய காங்கிரஸ் அரசை மட்டும் குற்றம் சாட்ட முடியாது.

பொருளாதாரத்தை சீரமைக்க பா... அரசுக்கும் போதிய கால அவகாசம் இருந்தது என்று பா... மூத்த தலைவரும், முன்னாள்  மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசு வழிவகுத்து விட்டதாகவும், பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும்தான் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் யஷ்வந்த்சின்கா கூறியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எது எப்படி இருந்தாலும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை உடனடியாக கண்டு பிடித்து அதனை சரி செய்து இந்தியாவை பொருளாதார பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.