Home சினிமா மனோஜ் நடிக்கும்  சாக்லேட் பேபி

மனோஜ் நடிக்கும்  சாக்லேட் பேபி

22
0
SHARE

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் சாக்லட் பேபி என்ற புதிய ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆல்பம பற்றி அவர் கூறும் போது, “நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே புலியூர் சரோஜா டான்ஸ் மாஸ்டர் ம்ஊலமாக ராஜா சின்ன ரோஜாபடத்தில் டான்ஸராக கால் வைத்து விட்டேன்.

  ராஜீ சௌந்தரம், பிரபுதேவா ஆகியோரிடம் வேலைபார்த்தேன். ஜெண்டில் மேன், திருடாதிருடா, பம்பாய் போன்ற 200 படங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டேன்கதிர் இயக்கத்தில் காதல் தேசம் படத்தின் மூலம் டான்ஸராக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற படங்களில் வேலை பார்த்தேன்.

முதன்முதலில் நான் பெற்ற விருது பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சாந்தாராம் விருது  வாங்கியது மறக்க முடியாதது. தற்போது ஜெயிக்கிற குதிரை, வில்லங்கம், சகவாசம் பாரதிராஜாவின் புதிய படம் ஆகியவற்றில் பணியாற்றுகிறேன்.

இதற்கிடையில் சாக்லட் பேபி என்ற இந்த இசை ஆல்பத்தை எடுத்திருக்கிறேன். இந்த ஆல்பத்தில் பா.நிகரன் பாடல்களை எழுதியிருக்கிறார். ராம் இசையமைத்திருக்கிறார்ஆல்பத்தில்மனோஜ்பாரதிராஜாநவநீதா, கீதாஞ்சலி கியோர்நடித்திருக்கிறார்கள்.’ என்றார் கூல் ஜெயந்த்.