Home உலகம் 22&ந் தேதி தேர்தல்? ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு 22&ந் தேதி தேர்தல்?

22&ந் தேதி தேர்தல்? ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு 22&ந் தேதி தேர்தல்?

7
0
SHARE

ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு டோக்கியோ, செப்.29&

ஜப்பான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அடுத்த மாதம் 2&ந் தேதி தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதாரத்தை நிர்வகிக்கும் சக்திவாய்ந்த நாடுகளுள் ஜப்பானும் ஒன்று. அந்நாட்டின் பிரதமராக ஷின்ஜோ அபே உள்ளார். இந்த நிலையில் வடகொரியாவின் சமீபத்திய செயல்பாடுகள், ஜப்பானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் வடகொரியா மீது உலக நாடுகள் விதித்து வரும் பொருளாதார தடைக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதற்கிடையில், வடகொரியாவுக்கு எதிராக, ஜப்பான் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து மாதிரி வாக்கெடுப்பு நடந்தது.

இதில் 44 சதவீதம் பேர் அபேக்கு ஆதரவு தெரிவித்தனர். 8 சதவீத எதிர்ப்பு வாக்குகளே பதிவாகி இருந்தன.

இன்னும் முடிவை தீர்மானிக்கவில்லை என 20 சதவீதம் பேர் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து மக்கள் செல்வாக்கு உள்ள போதே, பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த அபே திட்டமிட்டு உள்ளார்.

அவர் அறிவித்தப்படியே, ஜப்பான் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை நேற்று கலைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 22&ந் தேதி தேர்தல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே போட்டி என்ற போதிலும் ஷின்ஜோ வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here