Home உலகம் (ஏ)டாகூட பத்திரிகையான ‘பிளேபாய்’ நிறுவனர் காலமானார்

(ஏ)டாகூட பத்திரிகையான ‘பிளேபாய்’ நிறுவனர் காலமானார்

10
0
SHARE

நியூயார்க், செப்.29&  உலகம் முழுக்க ரசிக பெருமக்களை கொண்டபிளேபாய்இதழின் நிறுவனர் காலமானார். அவருக்கு வயது 91.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘பிளேபாய்இதழுக்கு, உலகம் முழுக்க வாசகர்கள் உண்டு. இந்த இதழின் அட்டை படத்தில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் அதிதூக்கலான கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். இந்த அதீத கவர்ச்சி, பார்ப்பவர்களுக்கு ஒருவித கிரக்கத்தை ஏற்படுத்தும். இது அட்டை படத்தில் இடம் பெற்றிருப்பவர்களின் மார்க்கெட்டை பன்மடங்கு உயர்த்தும்.

ஆதலால் இந்த இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர். இந்த இதழை ஹக் ஹெப்னர் என்பவர் 1953&ம் ஆண்டில் தொடங்கினார். ஆண்களால் அதிகமாக வாங்கப்படும் என்ற பெருமையை பெற்ற இந்த இதழ், 1975&ம் ஆண்டுகளில் மாதம் 70 லட்சம் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்தது.

தற்போது இதனை விட, அதிக படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன. இதனால் பிளேபாயின் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. எனினும் தற்போது மாதம் 8 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2016) பிளேபாய் அட்டை படத்தில் கவர்ச்சி படங்கள் இனி இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த அட்டை படத்தில் கடைசியாக இடம்பெற்ற நடிகை பமீலா ஆன்டர்சன்.

இதழின் நிறுவனர் ஹப்னரும் ஒரு பிளேபாய்தான். அதை அவரே பலமுறை பேட்டியின் போது கூறியிருக்கிறார். இந்த நிலையில் தனது 86&வது வயதில் தன்னை விட 60 வயது குறைந்த கிறிஸ்டன் ஹாரிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடைசி காலத்தில் தனது மகன்கள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வயோதிகம் காரணமாக மரணித்து விட்டார். இதனை அவரது மகன் தெரிவித்தார்.

ஹப்னருக்கு தற்போது 91 வயது ஆகிறது. கடந்த 1990&ம் ஆண்டு, பிளேபாய் அட்டை படத்தில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடம் பெற்று இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.