Home சிறப்புச் செய்திகள் உலகை சுற்றி..! *

உலகை சுற்றி..! *

8
0
SHARE

மியான்மரில் இருந்து ஏராளமான ரோகிங்யா முஸ்லிம்கள் வெளியேறி வங்கதேசத்தில் அகதிகள் முகாமில் உள்ளனர். இந்த மக்களுக்கு நிதி திரட்டும் பணியில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத் தவா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பணம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

* மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக லக்கானி மற்றும் லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளால், பாகிஸ்தானுக்கு அவமானம் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுவாஜா ஆசிப் ஐ.நா. மன்றத்தில் தெரிவித்தார்.

* அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நவம்பர் மாதம் சீனா செல்ல உள்ளார். இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று சீனா சென்றார். அவர் வருகிற 1&ந் தேதி வரை அங்கிருந்து வடகொரியா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளார்.

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிக் கூடத்தில் பயிலும் சக மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவன் குத்தி கொல்லப்பட்டான். மற்றொரு மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திய மாணவனை போலீசார் கைது செய்தனர்.

* குர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இந்த நிலையில் வாக்கு முடிவுகளை வெளியிடக் கூடாது என ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here