Home சினிமா ஸ்பைடர் விமர்சனம்

ஸ்பைடர் விமர்சனம்

22
0
SHARE

நாயகன் மகேஷ் பாபு செல்போன்களை ஒட்டுக்கேட்கும் கம்பெனியில் வேலை பார்கிறார். இந்த வேலையில் யாராவது ஆபத்திலிருந்து கொண்டு பேசினால்  அதை அவருக்கு தெரியவைக்க ஒரு சாப்ட்வேரையும் கண்டுபிடித்து இணைக்கிறார். இந்த போன்காலில் யார் யாரை மிரட்டினேலோ, யாராவது உதவி கேட்டாலோ உடனே மகேஷ்பாபுவே களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவி செய்கிறார்.

ஒருநாள் ஒரு இளம் பெண் தான் வீட்டில் தனியாக இருப்பதாகவும், வீட்டில் கரண்ட் இல்லையென்றும் யாரோ வீட்டுக்குள் இருப்பது போன்றும் தனக்கு பயமாக இருக்கிறதென்று தனது தோழியிடம் உதவி கேட்கும் போன் கால் வருகிறது. இந்த காலை கேட்டதும் மகேஷ்பாபுஅந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்ய தனது போலீஸ் குழுவை அனுப்புகிறார். ஆனால் மறுநாள் அவர்கள் இருவரும் கை கால்கள் வெட்டப்பட்டு பிணமாக கிடக்கிறார்கள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் மகேஷ்பாபு அந்த்அ வேலையை விட்டு விலகுகிறார். ஆனால் நண்பர்கள் அப்பாவின் வற்புறுத்தலால் மீண்டும் அந்தப் பணியில் சேர்கிறார். அந்த கொலைகளை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதில் அவருக்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நேர்கிறது. அதுதான் படம். மகேஷ்பாபு செம ஆக்ஷன் ஹீரோவாக தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். ஆனாலும் அவரது தெலுங்கு படங்களை பார்த்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

என்... அதிகாரிகள் வந்து தன்னை கைது செய்ய வேண்டும் என்று சொல்லும்போது அவர் அனுமதிகேட்டு சீரியல் பார்க்கும் பெண்களை வைத்து வில்லன் சூர்யாவ்ஐ பிடிக்க போடும் திட்டம் அதில் காட்டும் மகேஷ்பாபுவின் ஆக்ஷன் எல்லாம் சூப்பர்.

பெண்கள் வெட்டப்பட்டு கிடப்பது பார்த்து நிலைகுலைவதும் இடிந்த கட்டிடங்களுக்குள் பலரை காப்பாற்றும் போதும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடபிடிக்கிறார் மகேஷ்பாபு.

ராகுல் பிரீத்திசிங் ஆபாச வீடியோவைப் பார்த்து விட்டு அதே போல தனக்கு ஒரு பாய் ப்ரண்ட் வேண்டும் என்று தேடும்போது மகேஷ்பாபுவே நேரில் வந்து நிற்பதுதான் ஹீரோ இமேஜ் தகர்கிறது. கஜினியில் அசின் போல் இதில் ராகுலின் கதாபாத்திரம் எடுபடவில்லை. பரத் சிறிய வேடம் என்றாலும் மனதில் நிற்கிறார். எஸ்.ஜே.சூர்யா பயமுறுத்துகிறார். அழுகுரல் கேட்டு மகிழ்ச்சியடையும் குணம் மிரட்டுகிறது.

அந்த பாத்திரப் படைப்பே கவனிக்க வைக்கிறது. மனிதாபிமானத்தைப்பற்றி க்ளைமேக்ஸில் ஹீரோ பேசும் காட்சி இயக்குனரின் முகத்தைக் காட்டுகிறது. தெலுங்கு ஹீரோ என்பதாலோ பல காட்சிகளை தமிழ் சினிமாவுக்கு ஒவ்வாத நம்பமுடியாத காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட பாடலாக இருக்கிறது. பின்னணி இசையில் புதுமை காட்டியிருக்கிறார்

ஸ்பைடர்  ஆக்ஷன் திகில்