Home விளையாட்டு வெளிநாட்டு மண்ணில் தொடர் தோல்வி: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பதவி தப்புமா? முன்னாள் வீரர்...

வெளிநாட்டு மண்ணில் தொடர் தோல்வி: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பதவி தப்புமா? முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு

24
0
SHARE

மும்பை, செப். 29& ஆஸ்திரேலிய அணியின் மோசமான தோல்விகளுக்கு, கேப்டன் ஸ்மித்தே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவிடம் 3&0 என்ற கணக்கில் தொடரை இழந்து விட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோட்னி ஹோக், ஆஸ்திரேலியாவின் மோசமான தோல்விக்கு கேப்டன் ஸ்மித்தே காரணம் என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:& ஆஸ்திரேலியா கடைசியாக 2016&ம் ஆண்டு, அயர்லாந்து உடனான போட்டியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் வெளிநாட்டு மண்ணில் விளையாடிய 13 போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. அதில் சில மோசமான தோல்விகளும் அடங்கும். தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத சூழ்நிலையும் இருந்துள்ளது.

இன்றைக்கும் என்ன நடக்கிறது. உலக சாம்பியன் இந்தியாவிடம் ஒரு வெற்றியாவது கிடைக்காதா? என்று போராடுகிறது. தற்போதுள்ள நிலையில் ஓயிட்வாசை தவிர்க்க ஒரு வெற்றியாவது பெறுவது அவசியம். இதற்கு என்ன காரணம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித், விளையாட்டு வீரர்கள் தேர்வில் தலையிடுவதே ஆகும். அணியில் நல்ல வீரர்கள் இருந்த போதிலும் அவர்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளனர்.

கார்ட்ரைட் இருக்கும்போது அகர் அணிக்குள் இழுக்கப்படுகிறார். இதில் பல்வேறு கேள்விகள் எழுகிறது. ஸ்மித், வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்தாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பவுலரான ஹோக்கின் குற்றச்சாட்டு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் பதவி தப்புமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.