Home தமிழகம் உ.பி.யில் 70 குழந்தைகள் உயிரிழப்பு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் இ.வி.கே.எஸ். இளங்கோவன்...

உ.பி.யில் 70 குழந்தைகள் உயிரிழப்பு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் இ.வி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்

35
0
SHARE

சென்னை, ஆக. 16 & உத்தரபிரேதசத்தில் 70 குழந்தைகள் உயிரிழப்பை அடுத்து அந்த மாநில முதல்வர் ராஜினாமா வேண்டும் என இ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், அந்த பகுதியில் காந்தி சிலையை திறந்து வைத்தார்.

1954ஆம் ஆண்டு முதல்வராக இருந்த காமராஜரால், திருவொற்றியூர் காலடிபேட்டைப் பகுதியில் திறந்து வைக்கபட்ட காந்தி சிலை பழுதடைந்தது. அந்த காந்தி சிலை மீண்டும் புதுபிக்கப்பட்டது. இதனை திறந்து வைத்து பேசிய இ.வி.கே.எஸ். இளங்கோவன், உத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு உடனடியாக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.