Home தமிழகம் மாவட்டதலைமைமருத்துவமனையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் ஆய்வு: டெங்குக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

மாவட்டதலைமைமருத்துவமனையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் ஆய்வு: டெங்குக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

17
0
SHARE

காஞ்சிபுரம், செப். 29& காஞ்சிபுரத்தில்செயல்பட்டுவரும்,  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தி.மு.. எம்.எல்..க்கள், .சுந்தர், சி.வி.எம்..பி. எழிலரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிசிச்சையை, தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 500&க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட  பொதுப் பிரிவு, கண், எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் பிரிவுகள் சரிவர செயல்படுவதில்லை, முறையான குடிநீர் வசதியில்லை, சுகாதார வசதிகள் சரியில்லாமல் மருத்துவமனையில் நாய்கள் உலவி வருவது  என பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களாலும் பொது மக்களாலும் புகாராகத் தெரிவிக்கப்பட்டு வந்தனமேலும், இந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென தனியாக உள்ள பிரிவில் முறையான மருத்துவம் செய்வதில்லை.  இதனையறிந்த தி.மு.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், தி.மு.க மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்..பி. எழிலரசன் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடத்தில் கேட்டறிந்தனர். மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆய்வின்போது, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சசிகலா, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுகுமார், தசரதன், ராதாகிருஷ்ணன், சாலவாக்கம் ஓன்றியச் செயலாளர் குமார் மற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்..க்கள்  காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உரிய படுக்கை வசதிகள் இன்றி நோயாளிகள் தரையில் படுத்து சிரமப்படுவதாகவும், உரிய மருத்துவர்களோ, பணியாளர்களோ இல்லாததால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மறைக்கப்பட்டு வருவதாகவும், இந்த புகார்களையெல்லாம் கையாலாகாத தமிழக அரசு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here