Home தலையங்கம் சுதந்திர காற்று எங்கே போனது…?

சுதந்திர காற்று எங்கே போனது…?

52
0
SHARE

.நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு பல மாற்றங்கள், பல முன்னேற்றங்களை நாடு அடைந்து வருகிறது ஆனாலும் இன்று வரை சில விஷயங்கலும், சில செயல்களும் மக்களை மன்னர் ஆட்சிக்காலத்தில் இருப்பது போல் மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது.  சுதந்திரம் என்பது என்னவென்று முதலில் அறிய வேண்டும். ஒரு நாட்டில் குடிமக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டியது அடிப்படை தேவைகளான உணவை நமக்கு கொடுக்கும் விவசாயி, வறட்சியின் பிடியில் சிக்கி திண்டாடிக் கொண்டிருக்கிறான்.

உடை தயாரிக்கும் கைத்தறி நெசவாளர்கள் விசைத்தறியால் நசுக்கப்பட்டுவிட்டனர். கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமாகிறது. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை என்று உங்களுக்கே தெரியும். கல்விக்கூடங்களில் கொள்ளைகள் நடக்கின்றன. மருத்துவம் படிக்க நினைக்கும்  மாணவர்களை நீட் தேர்வு என்ற அரக்கன் நசுக்கப்பார்க்கிறான்.

இன்றைய சுதந்திரம் என்பது மொழியையும், மதத்தையும், ஜாதியையும் தூக்கி பிடிப்பதில் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. நம் நாட்டில் உழைப்பிற்கு மதிப்பு இல்லாமல் போகிவிட்டது. இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்றும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதும் பேச்சில் மட்டும் தான் இருக்கிறது. அரசுக்கு எதிராக மக்கள் போராடினாலோ, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை உபயோகித்தாலோ குண்டர் சட்டம் பாந்ந்து விடுகிறது. இதான் சுதந்திரமா?

இன்று வரை தங்கள் வாழ்விடத்தைக் கூட காப்பாற்றிக்கொள்ள வழி இல்லாமல் கூட இருக்கிறார்கள் (நெடுவாசல், கதிராமங்கலம்). சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்று சொல்கிறது மத்திய அரசு. ஆனால் அந்த காற்று கூட இல்லாமல் உத்திரபிரதேச மாநிலத்தில் கோராக்பூரில் 70 குழந்தைகள் இறந்தனர். இப்படி இருக்கும் நிலையில் நாம் எப்படி சுதந்திரத்தை பற்றி உணர முடியும். ஆட்சிக் கட்டிலில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை பலப்பதுத்துவதிலும், வளர்ப்பதிலேயேயும் தான் குறியாக இருக்கிறதே தவிர மக்களை பற்றியும், அவர்கள் வாழ்க்கை தரம் பற்றியும் கவலைப்படுவது கிடையாது. இதை உணர்வார்களா?