Home சம்பவம் மாமல்லபுரம் அருகே பூஜைப் பொருட்கள் வாங்கச் சென்ற அர்ச்சகர் கார் மோதி பலி

மாமல்லபுரம் அருகே பூஜைப் பொருட்கள் வாங்கச் சென்ற அர்ச்சகர் கார் மோதி பலி

31
0
SHARE

மாமல்லபுரம், செப். 29&

மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ளது,  மல்லிகேஸ்வரர் கோவில். அறநிலையத்துறை கட்டுப்படடில் உள்ள இக்கோவிலின் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் சுரேஷ்கண்ணன்(30). கடந்த ஜூன் மாதம் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அர்ச்சகர் சுரேஷ்கண்ணன் கோவில் கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவனுக்கு 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் செய்து நிறைவு செய்தவர் ஆவார்

இந்த நிலையில் வழக்கம்போல் நடைபெறும் கோவில் பூஜைக்குத் தேவையான பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக மாமல்லபுரத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். எச்சூர் என்ற இடத்தில் செல்லும்போது மாமல்லபுரம் நோக்கி வந்த கார் ஒன்று சுரேஷ்கண்ணன் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் அவர் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்இறந்த அர்ச்சகர் சுரேஷ்கண்ணன் உடலுக்கு கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், கோவில் விழாக்குழு நிர்வாகிகள் தொழிலதிபர் ஜி. ரங்கசாமி, யு. முருகன் மற்றும் பக்தர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here