Home சம்பவம் சீன மோட்டார் என்ஜின் விவகாரம் மீனவர்கள் போராட்டம் தீவிரம் மீன்பிடி தொழில், வியாபாரம் நிறுத்தம்

சீன மோட்டார் என்ஜின் விவகாரம் மீனவர்கள் போராட்டம் தீவிரம் மீன்பிடி தொழில், வியாபாரம் நிறுத்தம்

9
0
SHARE

சென்னை, செப். 28&

சீன மோட்டார் என்ஜின் பொருத்தி விசைப்படகுகளில் மீன் பிடிப்பதை கண்டித்து, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில், மீனவர்கள், கருப்புகொடி ஏந்தி போராட்டம் , நடத்தியதோடு, மீன் பிடி தொழில் மற்றும் வியாபாரத்தையும் நிறுத்தியுள்ளனர்.

சென்னை, காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில், அரசாணையை மீறி, சீன மோட்டார் என்ஜின் பொருத்தி, விசைப்படகுகளில் மீன் பிடி தொழில் செய்வதை கண்டித்து, சென்னை, செங்கை சிங்கார வேலர் விசைப்படகு உரிமையாளர் சங்கம்  சார்பில், பொதுச் செயலாளர் எம்.விஜேஷ், தலைவர் ஜி.ஆர் . அரசு தலைமையில், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், சீன மோட்டார் பொருத்திய , விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர்.

ஆனால், காசிமேடு மீன் பிடி துறைமுகம் காவல் நிலையத்தில், விசைப்படகை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பொய் வழக்கு போட்ட காவல் துறையை கண்டித்தும், சீன மோட்டார் என்ஜினுக்கு நிரந்தர தடைக்கோரியும், நேற்று படகுகளில், கருப்பு கொடி ஏந்தியும், மீன் பிடி தொழில் மற்றும் மீன் வியாபாரம் ஆகியவற்றை நிறுத்தியும்  காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு மீனவர் முற்போக்கு சங்கத் தலைவர் ஜெகதீசன், மீனவ மக்கள் முன்னணி கட்சி தலைவர் வே.சங்கர் மற்றும் வலை மேஸ்திரி சங்கம், மீன் வியாபாரம் சங்கம் ஆகியவை கலந்துக்கொண்டனர். இது குறித்து, மீன் வியாபர சங்கத் தலைவர் செல்லக்கண்ணு கூறும்போது, 1300 விசைப்படகுகள், அரசாணைப்படி, மீன் பிடித்து வருகிறது. ஆனால், 200 படகுகள் சட்டவிரோதமாக , சீன மோட்டார் என்ஜின் பொருத்தி மீன் பிடித்து, கடல் வளத்தை அழித்து, மீன்கள் இனம் அழிந்து வருகிறது. எங்களின், வியாபாரமும் சரிந்துபோய்விட்டது என்றார்.இந்த போராட்டத்தில், மீனவ பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here