Home அரசியல் மாணவர்களின் கல்வி பாழாக அதிகாரிகள் துணை போகலாமா? மு.க.ஸ்டாலின் அறிக்கை

மாணவர்களின் கல்வி பாழாக அதிகாரிகள் துணை போகலாமா? மு.க.ஸ்டாலின் அறிக்கை

9
0
SHARE

சென்னை, செப். 28& மாணவர்களின் கல்வி பாழாக அதிகாரிகள் துணை போகக்கூடாது என்று தி.மு.. செயல் தலைவர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.. செயல் தலைவர் மு..ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். நூற்றாண்டு விழா என்ற பெயரில் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதற்கு பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தங்கள் சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, .தி.மு..விற்குள் நடக்கும் உட்கட்சி பூசலுக்கும், தி.மு..வை விமர்சிப்பதற்கும் கிடைத்த அரசியல் மேடையாக மாற்றி அரசு பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.. சார்பில் ஏற்கனவே கண்டித்து அறிக்கை வெளியிட்டும், இன்னும் அரசியல் விழாக்களாகவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களை தொலைதூரங்களில் இருந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து மணிக்கணக்கில் காக்க வைத்து, அரசுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டுகிறது மாணவர்களை இன்னல்களுக்கு உட்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு மனதோடு வரவேற்கப்பட வேண்டியதாகும்.

எதிர்காலத்தில் அரசு விழாக்களுக்கு, அதிலும் குறிப்பாக இதுபோன்ற அரசியல் பேசும் விழாக்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவதற்கு எந்த கல்வி அதிகாரிகளும் துணை போகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுஒருபுறமிருக்கமுன்னாள்முதல்வர்ஜெயலலிதாஉடல்நலம்குன்றியிருந்தநேரத்தில்வடசென்னையில் 20 குழந்தைகளை நிர்பந்தப்படுத்தி அலகு குத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளானது. அந்த விசாரணையில் ஆணையமே உத்தரவிட்டும், வலுக்கட்டாயமாக அலகு குத்துவதை வேடிக்கை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல், பெற்றோர் சம்மதத்துடன்தான் அந்த நிகழ்வில் குழந்தைகள் கலந்து கொண்டார்கள் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரே வாதிட்டிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குழந்தைகளின்மனிதஉரிமைமீறும்செயல்களில்ஈடுபட்டவர்களைகாப்பாற்றநினைப்பதுவேதனைக்குரியதாகஅமைந்திருக்கிறது. ஆகவே 20 குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்த வைத்த வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணைய உத்தரவில் குறிப்பிட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை கேட்டுக் கொள்வதாக அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here