Home சம்பவம் அதிகாரிகள் அலட்சியம் நிதி திரட்டி கால்வாயை சீரமைத்த பொதுமக்கள்

அதிகாரிகள் அலட்சியம் நிதி திரட்டி கால்வாயை சீரமைத்த பொதுமக்கள்

6
0
SHARE

நாகர்கோவில், செப். 28& நாகர்கோவில் பொதுப்பணித்துறை  அதிகாரிகளின் அலட்சியத்தால் , வல்லன் குமாரன் விளை சித்திரை திரு மகாராஜபுரம் ஊர் மக்கள் நிதி திரட்டி புதர் மண்டி கிடக்கும் கால்வாய்யை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் விவசாய பயன்பாட்டிற்கும் குடிநீர் தேவைகளுக்கும் சாணல்களில் புதர் மண்டிக் கிடப்பதை அகற்றி கரைகளை சீர்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு இந்த வகையான பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு சில இடங்களில் நடைப்பெற்றதோடு சரி இதனால் தெங்கன் புதூர் பகுதிகளில் உள்ள சாணல்களில் புதர் மண்டி கிடப்பதோடு சகதி நிறைந்து இருப்பதால் தண்ணீர் கடை வரம்பு பகுதிகளில் செல்ல முடியாத நிலையில் விவசாயம் பாதிப்பதோடு குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது இந்நிலையில் வல்லன் குமாரன் விளைசித்திரை திரு மகாராஜபுரம் ஊர் மக்கள் சார்பில் பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஊர் நிர்வாகிகள் வீடு, வீடாக நிதி திட்டி பொக்களின் மூலம் சானல்களை தூர் வாரினர் இப்பணியினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பார்வையிட்டதோடு அதிகாரிகளிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here