Home தமிழகம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் 28 பேர் துணை இயக்குனர், முதல்வராக...

மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் 28 பேர் துணை இயக்குனர், முதல்வராக பதவி உயர்வு ஆணை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

22
0
SHARE

சென்னை, செப்.28& மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 28 பேர் துணை இயக்குனர் மற்றும் முதல்வராக பதவி உயர்வு பெற்றதற்கான ஆணையை அமைச்சர் கே..செங்கோட்டையன் வழங்கினார்.

பள்ளி கல்வித்துறையின் கீழ் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி மற்றும் ஆசிரியர் கல்வித்தரத்தை உறுதிச் செய்து, தொடர்ந்து நிலை நிறுத்தும் மாநில தலைமை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மேலும் தொடக்க, நடுநிலை, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை வடிவமைத்து உருவாக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளது.

இந்த பணிகளை சிறப்பாகச் செய்வதற்காக இந்த நிறுவனத்தில் 9 புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்காக பணிக்குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனஅந்த பணிக் குழுக்களின் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட முதுநிலை விரிவுரையாளர் நிலையில் இருந்து பதவி உயர்வு மூலம் துணை இயக்குனராக 11 பேரும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களாக 17 பேரும் என 28 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்ற 28 பேருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் பதவி உயர்வு உத்தரவினை வழங்கினார்இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறையின் இணை செயலாளர் சரவண வேல்ராஜ், கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர்கள் லதா, பொன்.குமார், வாசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.