Home சம்பவம் ஆம்பூர் பாலாற்றில் அனுமதியின்றி போடப்பட்ட தார்சாலை அகற்றம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ஆம்பூர் பாலாற்றில் அனுமதியின்றி போடப்பட்ட தார்சாலை அகற்றம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

10
0
SHARE

ஆம்பூர்செப் 28 ஆம்பூர் அருகே கடந்த இரன்டு ஆண்டுகளுக்கு முன்பாலாற்றில் அனுமதியின்றி போடப்பட்ட தார்சாலையை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் பாலாற்றில் கடந்த இரண்டு வருடங்களுக்குமுன் தனியார் ஷ§ தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஆம்பூர் மளிகை தோப்பு பகுதியில்இருந்து துத்திப்பட்டு சின்னவரிகம், பெரியவரிக்கம், உமராபாத், நரியம்பட்டு ஆகிய ஊர்களின் வழியாக பேர்ணாம்பட்டு குடியாத்தம் செல்வதற்கும் அந்தபகுதியில் இருந்து ஆம்பூர் நகருக்குள் வருவதற்கும் பாலாற்றின் நடுவில் மண்சாலை அமைத்து கடந்த பலஆண்டுகளாக அந்த சாலையை பொதுமக்கள்  பயன்படுத்தி வந்தனர் இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வரும் தொழிலாளர்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு தனியார் ஷ¨ தொழிற்சாலை நிர்வாகத்தால்அனுமதியின்றி  300 மீட்டர் தார்சாலை போடப்பட்டது .அப்போது பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் அதனை தடுத்து நிறுத்தாமல் அலைக்கழித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பாலாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீர் நிலைகளை பாதுகாத்திட பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று ஆம்பூர்துத்திப்பட்டு செல்லும் பாலாற்றில்  அமைக்கப் பட்டுள்ள தார்சாலையை பொதுப்பணித்துறை  உதவி பொறியாளர்  ராஜேந்திரன்  மற்றும் வட்டாட்சியர் மீராபென்காந்தி தலைமையிலான  பொதுப்பணித்துயினர் ,வருவாய்த் துறையினர் ஆம்பூர் ,உமராபாத் காவல் துறையினரின் பாதுகாப்போடு தார்சாலையை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள் சிலர் அதிகாரிகளிடம் லட்சக்கணக்கான மக்கள் செல்லும் சாலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது சாலையை அகற்றுவதால் ஆம்பூர் நகருக்குள் வரும் குறுக்குசாலை என்பதாலும் மளிகைதோப்பு, மோட்டுக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் ஷ¨ மற்றும் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு சாலை வசதியின்றி பாதிக்கப்படுவார்கள்  என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிலமணி நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here