Home சம்பவம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 80 பேர் கைது

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 80 பேர் கைது

16
0
SHARE

தாம்பரம், செப். 28& தாம்பரம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருநீர்மலை பேரூராட்சி திருமங்கையாழ்வார்புரத்தில் பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றவும், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் குடிமனைப்பட்டா வழங்காமல்

இருப்பதைகண்டித்தும், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு மண்னுரான்குளம் பழங்குடி இன இருளர் மக்களின் 14 குடும்பங்களை இடித்து தரமட்டமாக்கிய நகராட்சியை கண்டித்தும், அதே பகுதியில் அனைவருக்கும் குடிமனைப்பட்டா, மின் இணைப்பு வழங்க வேண்டியும்,

திருநீர்மலையில்அனுமதியேஇல்லாமல்சடத்திற்குபுறப்பாகசெயல்படும்கிரஷர்கள், தார் கலவை இயந்திரங்களை தடுத்து நிறுத்தி சுற்றுசுழலை பாதுகாக்க வேண்டியும், பழந்தண்டலத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியிலும், கல்குவாரி செயல்பாட்டால் விவசாயிகள் வாழ்வதாரம் பறிபோவதை தடுத்திடவும், கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்திடவும், திருநீர்மலை பேருராட்சி ஆக்கிரமிப்பு செய்துள்ள சமுதாய நலக்கூடத்தை மீண்டெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமணமண்டபத்தில் தங்கவைத்தனர்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் செய்தியலாளர்களிடம் கூறுகையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை நிரம்பியும், தமிழக அரசு இன்னும் தண்ணீர் திறந்து விட வில்லை.

உடனடியாக சம்பா பாசனத்திற்கு தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்பயிர்கள் வாடியதால் 300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 82 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுஅதிர்ச்சியால் இறந்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்

விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு  ஏராளமான விவசாயிகள் காத்திருப்பில் உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.