Home தமிழகம் சுதந்திர போராட்ட தியாகிகள்: ஒய்வூதியம் 13 ஆயிரமாக உயர்வு முதல்வர் அறிவிப்பு

சுதந்திர போராட்ட தியாகிகள்: ஒய்வூதியம் 13 ஆயிரமாக உயர்வு முதல்வர் அறிவிப்பு

39
0
SHARE

சென்னை, ஆக. 16& சுதந்திர பேராட்ட தியாகிகளுக்கு ஒய்வூதியம் 13 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தங்களின்சொந்த நலன்களைக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த தியாகச் செம்மல்களை  சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்;

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்கவும், இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், அதில் தமிழ்நாட்டை வளம் மிக்க மாநிலமாக ஆக்கவும்இந்த அரசு தொடர்ந்து செயல்படும் என உறுதியளிக்கிறேன்.இவ்வாறு பேசினார்.