Home விளையாட்டு மைக்கேல் கிளார்க்கை கலாய்த்த ஹர்பஜன்

மைக்கேல் கிளார்க்கை கலாய்த்த ஹர்பஜன்

17
0
SHARE

புதுடெல்லி, செப். 27& 2013&ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அந்த தொடரை கடும்போராட்டத்திற்குப் பின் 3&2 எனக் இந்தியா கைப்பற்றியதுஎனினும் தற்போதைய தொடரில், இந்தியாவில் 3&0 என்ற கணக்கில் தொடரை இழந்து திணறி வருகிறது.

இந்த நிலையில் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘மேட், உங்களுடைய ஓய்வு முடிவை திரும்பெற்று, அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும். சகாப்தமான ஆஸ்திரேலியா, டாப் பேட்ஸ்மேன்களை உருவாக்கியது முடிந்து விட்டது. தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை.’’ இவ்வாறு கூறியுள்ளார். 2015&ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடருடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், அதே ஆண்டு ஆஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியதுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது நினைவுக் கூரத்தக்கது.