Home விளையாட்டு வோடாபோன் நிறுவனம் சார்பில் கோவையில் 1&ந் தேதி மாரத்தான் போட்டி 13,500 பேர் பங்கேற்கின்றனர்

வோடாபோன் நிறுவனம் சார்பில் கோவையில் 1&ந் தேதி மாரத்தான் போட்டி 13,500 பேர் பங்கேற்கின்றனர்

10
0
SHARE

கோவை, செப். 27& வோடபோன் சார்பில் கோவையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இதில் 13,500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகான மெடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டீசர்ட் அமைப்பாளர்களால் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.  கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் ஆகியோரின் ஆதரவோடு இந்த மாரத்தான் போட்டியை  கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் நடத்துக்கிறது. தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரம் மற்றும் ஆதரவோடு வோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெறுகிறது.

21.1 கி.மீ. ஓட்டம் (பாதி மாரத்தான்), 10 கி.மீ. ஓட்டம் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் நடை என்ற மூன்று பிரிவுகளாக இந்த மாரத்தான் நடைபெறுகிறது.  21.1 கி.மீ. தூரம் கொண்ட பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.25,000, 15,000 மற்றும் 10,000 என பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

10 கி.மீ. பிரிவில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்களுக்கான பரிசுத்தொகை ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என்பதாக இருக்கும். மூத்த குடிமக்களுக்காக அரை மாரத்தான் நடக்கிறது.  முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு ரூ. 15,000, ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 பரிசு வழங்கப்படுகிறது. 10 கி.மீ ஓட்டத்திற்கான நிகழ்வில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றும் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையாக முறையே ரூ.10,000 ரூ.7,500  மற்றும் ரூ.5,000 வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் வோடபோன் மொபைல் சர்வீசஸ் லிமிடெட்ன் பிசினஸ் தலைமை அலுவலர் எஸ். முரளி பேசுகையில், புற்றுநோய் மீதான விழிப்புணர்வை பரப்புவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவியிருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் சி.சி.எப்ன் நிர்வாக அறங்காவலர் டாக்டர். பாலாஜி, மாரத்தான் ரேஸ் இயக்குநரான ரமேஷ் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here