Home உலகம் ஷேக் ஹசீனாவை கொல்ல சதியா? வங்கதேச அரசு மறுப்பு

ஷேக் ஹசீனாவை கொல்ல சதியா? வங்கதேச அரசு மறுப்பு

14
0
SHARE

டாக்கா, செப்.27& வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அலுவலகம் மற்றும் குடியிருப்பில் சிறப்பு பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த சதி திட்டத்தை, ஜமாத் உல் முஜாகிதின் வங்கதேசம் என்ற பயங்கரவாத அமைப்பு தீட்டியதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த சதிதிட்டத்தை முறியடிக்க இந்திய உளவுத் துறை உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதுபோன்ற சதி திட்டம் எதுவும் நடைபெறவில்லை என வங்கதேச அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:&

பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய திட்டமிட்டதாக வெளியான செய்த முற்றிலும் ஆதாரமற்றதாகும். நாட்டு மக்களை திசைதிருப்பும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு வங்கதேச பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here