Home உலகம் உலகம் மீண்டு(ம்) வரும் ‘ஜெர்மனி தேசியம்’ வலதுசாரி வாக்குவங்கி அபாரம்; மெர்கல் ஆதரவு சரிவு 

உலகம் மீண்டு(ம்) வரும் ‘ஜெர்மனி தேசியம்’ வலதுசாரி வாக்குவங்கி அபாரம்; மெர்கல் ஆதரவு சரிவு 

70
0
SHARE

பெர்லின், செப்.27& ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி வாகைசூடி மீண்டும் அதிபராகிறார் ஏஞ்சலா மெர்கல். எனினும் அவர் சார்ந்திருந்த அரசியல் இயக்கம் வாக்கு வங்கியில் கடும் சரிவை சந்தித்து உள்ளது.

ஜெர்மனி அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கல்லின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் ஆளும் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் ஏஞ்சலா மெர்கல்லுக்கும், சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்டின் ஷ¨ல்ச்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் 32.9 சதவீத சதவீத ஓட்டுகள் பெற்று  ஏஞ்சலா மெர்கல் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மார்டின் ஸ்கல்ஸ§க்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும் ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான மாற்றத்திற்கான ஜெர்மனி கட்சி 13 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இது அக்கட்சியை மக்கள் ஏற்று கொண்டு வருவது காட்டுகிறது.

ஏற்கனவே இரண்டாம் இடம் பிடித்த சமூக ஜனநாயகக்கட்சி மெர்கலுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் அக்கட்சி எதிர்கட்சி வரிசையில் அமரப்போவதாக அறிவித்துள்ளது. மீதமுள்ள எப்டிபி கட்சி 10 சதவீதமும், கிரீன் கட்சி 9 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. இக்கட்சிகள் இரண்டும் மெர்கல் கட்சியுடன் கொள்கை அளவில் முரண்பாடு உடைய கட்சிகள்.

எனவே பாராளுமன்றத்தில் மெர்கல் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். தீவிர வலதுசாரி கட்சியான மாற்றத்திற்கான ஜெர்மனி கட்சி 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது4 ஆண்டுகளுக்குள் அக்கட்சி மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டின.

இந்த நிலையில் அவர்களுக்கு, ஜெர்மனில் இடம் அளித்தார் மெர்கல். சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேறுநாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதிகம் குடியமர்த்தப்பட்டனர். அவர்களில் முஸ்லிம்களும் உண்டு. மாற்றத்திற்கான ஜெர்மனி கட்சி இதற்கு எதிரான கொள்கை கொண்டது. ”ஜெர்மனில் ஜெர்மனியர்களுக்கே முன்னுரிமைஎன்ற தேசியவாதச் சிந்தனைக் கொண்ட கட்சி அது.

ஆகவே, அகதிகள் விஷயத்தில் மெர்கல் கடும் நெருக்கடியை எதிர்கொள்வார் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் மெர்கல் கட்சியின் வாக்குவங்கி சரிவிற்கும் இதுவே பிரதான காரணியாக கருதப்படுகிறதுஹிட்லரின் வீழ்ச்சிக்குப்பிறகு ஜெர்மனி கிழக்கு, மேற்கு என இரண்டாக துண்டானது. கிழக்கு ஜெர்மனியை சோவியத் யூனியனும், மேற்கு ஜெர்மனியை அமெரிக்காவும் பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டன.

கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிச சிந்தாதத்தின் ஆதிக்கத்தால் இறுக்கமான சூழல் நிலவியது. மேற்கு ஜெர்மனியில் தாரளமயக்கொள்கையால் வேலைவாய்ப்புகள் பெருகினஇதனால் மேற்கு ஜெர்மனிக்கு துருக்கி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் குடியேறத் தொடங்கினார்கள். கிழக்கு ஜெர்மனியில் இருந்தும் பலர் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி வந்தனர்.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒருங்கிணைந்த பின்னரும் கிழக்கு ஜெர்மனியில் வசித்த மக்களின் மனங்களில் நெகிழ்வுத்தன்மை ஏற்படவில்லை. ஜெர்மன் தேசியம் அவர்கள் சிந்தனையில் இன்னும் இருக்கிறது எனலாம்அதை பிரதிபலிப்பது போல் இந்தத் தேர்தலில் வலதுசாரி மாற்றத்திற்கான ஜெர்மனி கட்சிக்கு மேற்கு ஜெர்மனியை விடவும், கிழக்கு ஜெர்மனியில் ஒரு மடங்கு ஓட்டு அதிகம் கிடைத்துள்ளது.

இது மெர்கலுக்கு பெருத்த பின்னடைவாகும். உக்ரைன் போர், கிரேக்க நாட்டு பொருளாதார வீழ்ச்சி என்று ஒன்றன்பின் ஒன்றாக வெளிநாட்டு பிரச்சினைகளை கடந்த ஆட்சிக்காலத்தில் சமாளித்து வந்தார்இந்த முறை அவர் நிச்சயம் உள்நாட்டு பிரச்சினையில் உள்ள சவால்களை சமாளிக்க வேண்டும். சவால்களை சாதனைகளாக மாற்றும் தனித்திறமை மெர்கலுக்கு இருந்தாலும், வலதுசாரி கட்சி வலிமையாக நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பது மெர்கலுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.