Home உலகம் ‘ரோகிங்யா இனப்படுகொலை’ என்பதை ஏற்க இயலாது ஐ.நா.வில் மியான்மர் அரசு அறிவிப்பு

‘ரோகிங்யா இனப்படுகொலை’ என்பதை ஏற்க இயலாது ஐ.நா.வில் மியான்மர் அரசு அறிவிப்பு

13
0
SHARE

நியூயார்க், செப்.27& மியான்மரில் ரோகிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று ஐ.நா. மன்றத்தில் மியான்மர் தூதர் ஹெள டு சுவான் தெரிவித்தார்.

மேலும் உலக நாடுகள் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்மியான்மர்ராக்கைன்மாவட்டத்தில்ரோகிங்யாமுஸ்லிம்கள்பெருமளவுவசிக்கின்றனர். இந்த முஸ்லிம்களில் சிலர், மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 25&ந் தேதி, மியான்மர் ராணுவம் மீது ரோகிங்யா பயங்கரவாதிகள் (ஆர்சா) கொடூர தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, ராணுவம் ரோகிங்யா பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. அன்றிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறதுஇந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோகிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டின.

இந்த விவகாரத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் ஐ.நா பொதுசபை கூட்டத்தின் இறுதி நாளான நேற்று மியான்மர் நாட்டுக்கான ஐ.நா தூதர் ஹெள டு சுவான் உரையாற்றினார். அவர் கூறியதாவது:&

‘‘மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக உலக நாடுகள் கூறுவதை ஏற்க முடியாது. அவ்வாறு எந்தவித இனப்படுகொலையையும் மியான்மர் அரசு செய்யவில்லை. உலக நாடுகள் இது போன்ற பொறுப்பற்ற கருத்துகளையும், ஆதாரமற்ற குற்றசாட்டுகளையும் முன்வைப்பதை நிறுத்த வேண்டும்.’’ இவ்வாறு சுவான் கூறினார். மேலும் ஆர்சா கிளர்ச்சி படையினரின் தாக்குதலில் இருந்து, நாட்டு மக்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அவர் கருத்தை பதிவு செய்தார்.

இதுமட்டுமின்றி ஆர்சா படையினர் கிராமங்களை கண்னி வெடிகள் மற்றும் குண்டுகள் வைத்து தீக்கிரையாக்கி வருவதாதையும் அவர் சுட்டிக் காட்டினார். இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் கோரிக்கை அடிப்படையில், ரோகிங்யா விவகாரம் குறித்து நாளை (புதன்கிழமை) .நா. மன்ற கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் மியான்மரில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும். மியான்மரின் நிலை குறித்து ஐ.நா பொது செயலாளர் ஆண்டனி கட்டாரெஸ் தன் கருத்துகளை கவுன்சில் கூட்டத்தில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் இனப்படுகொலை நடந்தது உறுதிபடுத்தப்பட்டால், மியான்மர் நாடு மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here