Home உலகம் ஹார்வி புயல் இந்திய தம்பதி ரூ.1.5 கோடி உதவி

ஹார்வி புயல் இந்திய தம்பதி ரூ.1.5 கோடி உதவி

12
0
SHARE

டெக்சாஸ், செப்.27& அமெரிக்காவில் உள்ள ஹ¨ஸ்டன் மற்றும் டெக்ஸாஸ் பகுதிகளை ஹார்வி புயல் தாக்கியது. இந்த புயலுக்கு 70 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர்.

புயல் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்கு பையோஉர்ஜா குழுமத் தலைவர் அமித் பண்டாரி மற்றும் அவருடைய மனைவி அர்பிதா பிரம்பத் ஆகியோர் ஹார்வி புயல் நிவாரண நிதியாக 2லட்சத்து 50 ஆயிரம் டாலர் (சுமார் ஒரு கோடியே 63 லட்சத்து 35 ஆயிரத்து 625 ரூபாய்) வழங்கி உள்ளனர். அமித்பண்டாரி, அர்பிதா தம்பதியினர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

இந்த புயலுக்கு நிவாரண நிதியாக, அமெரிக்கவாழ் இந்தியர்கள் சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியாக திரட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here