Home அரசியல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் ராகுல் பிரச்சாரம்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் ராகுல் பிரச்சாரம்

20
0
SHARE

ஜாம்நகர், செப். 27& தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் படேல் சமூக மக்களின் ஆதரவை பெறுவதற்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பாடிதார் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அங்கு இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள், ராகுல் காந்தியை வரவேற்றனர்அப்போது, குஜராத்தி, காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜாம்நகரில் உள்ள மக்கள் தொப்பிகளை அணிந்துக் கொண்டு கோஷங்களை எழுப்பியப்படி ராகுல் காந்தியை வரவேற்றனர். குஜராத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், இரண்டாவது நாளாக துரோல் மற்றும் டங்காரா உட்பட பல கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ராகுல் காந்தியை வரவேற்ற படேல் சமூதாய தலைவர் ஹார்டிக், படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டின் இலக்கை அடைய, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸை ஆதரிப்பதாக தெரிவித்தார். அப்போது, பா...வுக்கு வாக்களித்த மக்கள் வருத்தப்படுகின்றனர்எனவே வருகிற தேர்தலில் காங்கிரஸை மக்கள் ஆதரிப்பார்கள் என தான் நம்புவதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.