Home தலையங்கம் கமல் விஸ்வரூபம்.!

கமல் விஸ்வரூபம்.!

10
0
SHARE

மகளின் மகளுக்காக சொத்து சேர்க்க அரசியலுக்கு வரவில்லை” இந்த வார்த்தைகள் கமல்ஹாசன் உதட்டில் இருந்து உதிர்ந்தவை. இங்கு நடக்கும் அரசியல் பிரச்சினைகள் மக்களின் பிரச்சினைகளை பற்றியது அல்ல. மாறாக அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் பிரச்சினை.

நீட் தேர்வு விவகாரம், டெங்கு காய்ச்சல் என அத்துனை விவகாரத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். ஊழலுக்கு எதிராக களம் இறங்குவேன் என்றும் அவர் கூறிவருகிறார். இதுமட்டுமின்றி தன்னை நோக்கி, வீசப்படும் அத்துனை விமர்சனங்களும் சூடான அதேசமயம் நச் பதில் கொடுத்து வருகிறார்.

கமல்ஹாசனுக்கு நெல்லை சீமையின் மைந்தன் பாரதியின் மீது தீராக மோகம் உண்டு. ஏன் காதல் ஏன்றும் சொல்லலாம். ஏனெனில் இருவருமே தமிழை உயிராய் எண்ணுபவர்கள். கமலின் பேச்சில் எழுத்தில் தமிழ் உரைநடை கலப்பு இருக்கும். அதற்கு பாரதியின் மீது கொண்ட தாக்கமே காரணம். கமலின் அரசியல் தாகம் அதிகரித்து வருவது அடுத்தடுத்த பேட்டிகளின் மூலம் வெளிப்பட்டு வருகிறது.

திராவிடன் என்ற சொல்லை அழுத்தி பிடித்தாலும், அவர் நிச்சயம் தமிழகத்துக்கு பரிச்சயமான திராவிட அரசியலில் இருந்து வேறுபட்டுதான் நிற்பார் என்றே எண்ண தோன்றுகிறது. ஏனெனில் அவரின் சமீபத்திய பேச்சுகள் அவ்வாரே உள்ளது. ரஜினிகாந்தை கட்சியில் இணைத்து கொள்வீர்களா என்றதற்கு, நான் உங்களுடனே இவ்வளவு அரசியல் பேசுகிறேனே.! என் தொழில்முறை போட்டியாளராகிய அவரிடம் எவ்வளவு அரசியல் பேசியிருப்பேன் என்று பதில் கேள்வி தொடுத்தார். கமல்ஹாசன் நாத்திகம் பேசுபவர். ரஜினியோ ஆத்திகவாதி. இருவரும் இணைந்தால் என்னவாகும் என்ற எதிர்ப்பார்பு சிலருக்கு ஏற்பட்டுள்ளது. திராவிட அரசியலுக்கு ரஜினிகாந்த் மாற்று என்று சிலர் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் அரசியல் இயக்கம், கட்சி, கொடி என்று பரபரப்பாகி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஏனென்னால் இருவரும் சினிமாவில் போட்டியாளர்கள். அரசியலிலும் அவ்வாரே நடந்தால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு விடுவார்கள். இது சிலரின் அரசியலுக்கு லாபமாக அமைந்து விடும் என்றவொரு குற்றச்சாட்டும் உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இது அனைவருக்கும் உள்ள உரிமை. கவர்ச்சி மற்றும் மோக அரசியலில் சிக்காமல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தன் தலைவனை தேர்ந்தெடுக்கும் உரிமை, ஜனநாயக நாட்டில் மட்டுமே உண்டு. எனவேதான் முறுக்கு மீசை கவிஞன், எல்லோரும் ”இந்நாட்டு மன்னரடி” என்றார். மிஸ்டுகால் கொடுத்தால் நதிகள் இணையும் என்றும் நம்புவதும், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் ஊழல் ஒழியும் என்பதும் ஒன்றுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here