Home உலகம் ஈரான், சாத் வரிசையில் வடகொரியா அமெரிக்க பயண தடை பட்டியலில் சேர்ப்பு அதிபர் டிரம்ப்...

ஈரான், சாத் வரிசையில் வடகொரியா அமெரிக்க பயண தடை பட்டியலில் சேர்ப்பு அதிபர் டிரம்ப் உத்தரவு

13
0
SHARE

வாஷிங்டன், செப்.26& அமெரிக்க பயண தடை பட்டியலில், ஈரான், ஈராக்கை தொடர்ந்து வடகொரியாவும் சேர்க்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் அப்போது அறிவித்தார். பெரிதும் விமர்சிக்கப்பட்ட டிரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் பலர் முறையிட்டனர். கீழமை நீதிமன்றங்களில் டிரம்ப் உத்தரவுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவை அனுமதித்தது.

வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பயணத்தடை பட்டியலில் மேலும் மூன்று புதிய நாடுகள் புதிதாக இணைந்துள்ளன. வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வடகொரியா உடன் ஏற்கனவே உள்ள ராணுவ ரீதியிலான பகை சற்றும் குறையாத நிலையில் இந்த தடை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. முன்னதாக, அமெரிக்கர்கள் எவ்வித காரணத்திற்காகவும் வடகொரியா செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

பட்டியலில் வெனிசுலா இடம் பெற்றாலும், அந்நாட்டு அரசு அலுவலர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பிரச்சினை இல்லை. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டிரம்ப், “பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குவதே எனது முதல் பணி” எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஆணை அடுத்த மாதம் 18&ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here