Home உலகம் குர்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஈராக்கில் பொது வாக்கெடுப்பு

குர்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஈராக்கில் பொது வாக்கெடுப்பு

14
0
SHARE

 பாக்தாத், செப்.26& ஈராக்கில் வசிக்கும் குர்து இன மக்களின் கோரிக்கையை ஏற்று, ஈராக்கில் பொதுவாக்கெடுப்பு நடந்தது.

ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க பகுதியும் இதுவே. குர்துகள் வாழும் இப்பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக்குழுவில் ஒரு பிரிவினர் (தொழிலாளர் கட்சி) ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல மக்கள் அகதிகளாக வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். எனினும் குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் அரசு ஏற்க மறுத்து விட்டது. ஈராக் துண்டாக பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்பாக்தாதி ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந்த நிலையில் குர்து இன மக்களுக்கு, இஸ்ரேல் ஆதரவு அளித்தது.

இதற்கான தீவிர பிரசாரம் முன் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வருகிறது. பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பாதுவாக்கெடுப்பு நடந்தது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஈராக் குர்துக்களின் முடிவுக்கு துருக்கியில் வசித்துவரும் சிறுபான்மை குர்துக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில் வசிக்கும் குர்துக்கள் குர்திஸ்தான் தனிநாடு கேட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈராக் குர்துக்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேறினால் அது சிரியா மற்றும் துருக்கி நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என துருக்கி அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதற்கு ஈராக் பிரதமர் ஹைதர் அல்பாக்தாதி அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, குர்து இன மக்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தீயோடு விளையாடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை எழுந்தால் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here