Home உலகம் ராணுவ அதிகாரி தகவல் 20 பெண்கள் உள்பட 28 இந்துக்கள் கொன்று புதைப்பு...

ராணுவ அதிகாரி தகவல் 20 பெண்கள் உள்பட 28 இந்துக்கள் கொன்று புதைப்பு மியான்மரில் 2 புதைகுழிகள் கண்டெடுப்பு

21
0
SHARE

நய்பிய்டா, செப்.26& 20 பெண்கள் உள்பட 28 பேர் ரோகிங்யா முஸ்லிம்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

மியான்மரில் ராகின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் அங்கு வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ரோகிங்யா பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் ராகின் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 4 லட்சத்து 30 ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கலவரம் நடந்த ராகின் மாகாணத்தில் 28 இந்துக்கள் கொன்று புதைக்கப்பட்ட தகவலை மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் கொன்று 2 புதைக்குழிகளில் புதைக்கப்பட்டு உள்ளனர்.  இந்த புதை குழிகள், யா பா கயா என்ற கிராமத்தில் உள்ளது. இதனை ராணுவம் தற்போது கண்டுபிடித்து உள்ளது.

கொல்லப்பட்ட இந்துக்களில் 20 பெண்கள் 8 ஆண்களும் அடங்குவர். அவர்களில் 6 மற்றும் 10 வயது சிறுவர்களும் அடங்குவார்கள். இவர்களை ரோகிங்யா பயங்கரவாதிகள் கொன்று புதைத்து உள்ளனர் என்று ராணுவ அதிகாரி ஒருவர் இணையத்தில் தகவல் வெளியிட்டு உள்ளார்.