Home உலகம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ராஜஸ்தானில் முஸ்லிம் பெண்ணுக்கு ‘முத்தலாக்’ மறுதினமே வேறு திருமணம் செய்த...

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ராஜஸ்தானில் முஸ்லிம் பெண்ணுக்கு ‘முத்தலாக்’ மறுதினமே வேறு திருமணம் செய்த கொடூரம்

20
0
SHARE

ஜோத்பூர், செப்.26& உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், ராஜஸ்தானில் முஸ்லிம் பெண்ணுக்கு முத்தலாக் அளிக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் மத்தானியாவில் வசிப்பவர் அப்சானா(26). இவருக்கு அமீன் எனும் முன்னா(30) என்பவருடன் எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

அப்போது முதல் வரதட்சனை கேட்டு அப்சானாவை முன்னா கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2015&ல் ஒருமுறை மண்ணெண்னெய் ஊற்றி அப்சானாவை தீ வைத்து எரித்துக் கொல்லவும் முன்னா முயற்சி செய்துள்ளார்.முன்னா மீது மத்தானியா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், அப்சானா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு ஒரண்டு குழந்தைகளும் உள்ளன.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18&ந் தேதி அப்சானாவின் மொபைலில் தொடர்பு கொண்ட முன்னா ஒரே சமயத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.இதன் மறுதினமே முன்னா வேறு ஒரு பெண்ணை 2&வதாக திருமணம் செய்துள்ளார். இதனால், முன்னா மற்றும் அவரது பெற்றோர் மீது அப்சானா ஜோத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சற்று தாமதமாக வெளியாகி உள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், சுமார் 1400 ஆண்டுகளாக முஸ்லீம்களால் முத்தலாக் முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்தமுறை சட்டவிரோதமானது எனவும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இதை அடுத்து முத்தலாக் மீதானது தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறுவுறுத்தலும் அனுப்பி இருந்தது. இதனால், அப்சானாவின் புகாரில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.