Home இந்தியா மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை உணவகங்களில் ஜி.எஸ்.டி.யால் பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை உணவகங்களில் ஜி.எஸ்.டி.யால் பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை

19
0
SHARE

கொல்கத்தா, செப். 26& மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை உணவகங்களில் ஜி.எஸ்.டி வரியினால் பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகைத் தருகின்றனர். அதனால் பக்தர்களுக்காக, துர்கா பூணீஜை சிறப்பு உணவகங்கள் அங்கு அமை க்கப்பட்டுள்ளன.

துர்கா பூஜை சிறப்பு உணவகங்களில் ஜி.எஸ்.டி.க்கு முன்பு 18.5 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 18 சதவீதமாக் குறைந்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு ஜி.எஸ்.டி வரியினால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சிறப்பு உணவகங்களுக்கு கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பல விருந்தினர்கள் வருகைத் தருகின்றனர், என கொல்கத்தா பார்க் பிளாசாவின் பொது மேளாலர் பால்பீர்  சிங் கூறினார்மேலும் செப்டம்பர் 24&ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு உணவகங்களில் அக்டோபர் 2&ஆம் தேதி வரையில் உணவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.