Home இந்தியா இந்தியாவில் மின்சார கார்கள் அறிமுகமா? டொயோட்டா துணை தலைவர் பேட்டி

இந்தியாவில் மின்சார கார்கள் அறிமுகமா? டொயோட்டா துணை தலைவர் பேட்டி

16
0
SHARE

புதுடெல்லி, செப். 26& இந்தியாவில் மின்சார கார்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதா? என்பது குறித்து டொயோட்டோ நிறுவன துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் தெரிவித்தார்அவர்கூறியதாவது:&

உள்நாட்டு வாகன துறையை பொறுத்தமட்டில், மின்சார வாகன அறிமுகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறதுமின்சார தொழில் நுட்பம் அரிதானது மட்டுமின்றி அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது.

எனவே இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது நிர்வாகத்துக்கு கடினமாக காரியம் அல்ல. மேலும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை ஏற்கனவே டொயோட்டா அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்ய போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பிறகே, டொயோட்டோ மின்சார கார்களை அறிமுகப்படுத்தும்.

அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அதிகரிப்பால், கடந்த ஆண்டை காட்டிலும் கார் விற்பனை சற்று சரிவை சந்தித்து உள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.