Home விளையாட்டு பத்ம பூஷன் விருதுக்கு சிந்து பெயர் பரிந்துரை

பத்ம பூஷன் விருதுக்கு சிந்து பெயர் பரிந்துரை

20
0
SHARE

புதுடெல்லி, செப். 26& இந்த ஆண்டு பத்மபூஷன் விருதுக்கு, பி.வி. சிந்து பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை பேட்மிண்டன் போட்டியில், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாட்டிற்கு வெள்ளி பதக்கத்தை வாங்கி கொடுத்தவர் பி.வி. சிந்து. இதை தொடர்ந்து அவருக்கு அரசின் உயர்பதவிகள், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்தநிலையில்சமீபத்தில்நடந்தகொரியஓபன்பேட்மிண்டனில், ஜப்பான் வீராங்கனை நசோமி ஓகுஹாராவை வீழ்த்தி, சாம்பியன் ஆனார். இந்த நிலையில் அவரின் பெயரை, பத்மபூஷன் விருதுக்கு விளையாட்டுதுறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த ஆண்டு நாட்டின் 2&வது மிக உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெறும் 2&வது விளையாட்டு வீரர் பி.வி. சிந்து ஆவார். இந்த ஆண்டு பத்மபூஷன் விருதுக்கு இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுத்த தேர்வாளர்களுக்கு பி.வி. சிந்து நன்றி தெரிவித்து உள்ளார். 2015&ம் ஆண்டு பி.வி. சிந்துவுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.