Home உலகம் சிங்கப்பூரில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை திறப்பு

சிங்கப்பூரில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை திறப்பு

23
0
SHARE

சிங்கப்பூர், செப். 26& பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி..) சிங்கப்பூரில் நேற்று தனது 6வது கிளையைத் திறந்தது. இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு சிங்கப்பூரிலும் கிளைகள் உள்ளன.

இதுவரை மரைன் பரேட், லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இவ்வங்கிக்கு 5 கிளைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் 6&வதாக ஆங் மோ கியோ பகுதியில் கிளை ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி திறந்துள்ளதுஇது மக்கள் குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர் பிரிவு தலைவர் சோம சங்கர பிரசாத் கூறியதாவது:&

சிங்கப்பூரில் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் சீனர்கள். மீதமுள்ள 20 சதவீதம் பேர் இந்தியர்கள். சிங்கப்பூரில் உள்ள மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் பாரத ஸ்டேட் வங்கி டெபாசிட் தொகைக்கு அதிக வட்டி வழங்குகிறதுமேலும், காப்பீடு உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. இந்த புதிய கிளை பாரத ஸ்டேட் வங்கியின் வளர்ச்சியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.