Home தலையங்கம் போதை வாகன ஓட்டிகளே உஷார்…!

போதை வாகன ஓட்டிகளே உஷார்…!

8
0
SHARE

தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் அசல் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து 50& வயதுக்கும் மேற்பட்டவர்கள் கூட இப்போதுதான் வாகனம் ஓட்டுவதற்கு அடிப்படை தேவையான  எல்.எல்.ஆர். சான்றிதழை பதிந்து வாங்கி செல்கின்றனர்.

கிட்டத்தட்ட 40 வயதுக்கு மேல் உள்ளவர்களிலேயே சுமார் 30 சதவீதத்துக்கும் மேல் உள்ளவர்கள் வாகனம் ஓட்ட எந்தவித லைசென்சும் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும். சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றக் குழு வாகன ஓட்டிகளுக்காக சில விதிகளை கடைபிடிக்கும்படி  அறிவுறித்தி உள்ளது. அதில் போதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகமாக வாகனத்தை இயக்குவது, அதிக பாரம் ஏற்றி செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யும்படி சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றக்குழு கூறி உள்ளது.

இந்தகுழுவின் உத்தரவின்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கடந்த ஜனவரியில் இருந்து இந்த மாதம் செப்டம்பர் 2&ந் தேதி வரை சுமார் 14 லட்சம் வழக்குகள் பதியப்பட்டனஇந்த வழக்குகள் மூலம் சுமார் 16 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற திட்டம் அமல் படுத்தப்பட்டபின் 8 ஆயிரத்து 400 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் வாகன ஒட்டிகளுக்கு 15 நாட்கள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல் துறை பரிசீலித்து வருவது மிகவும் வரவேற்க கூடிய திட்டமாகும்.

நாட்டில் நடக்கும் 80 சதவீத விபத்துகள் வாகன ஓட்டிகள் போதையில் இருப்பதால்தான் நடக்கிறது. இதனால் பல அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழக்க நேரிடுகிறதுஆகவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டாமல் இருக்க இதுபோன்று சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது திருந்துவார்கள். அப்பாவிகளும் இவர்களிடமிருந்து தப்பிப்பார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறை என்ற நடைமுறையை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here