Home சுடச்சுட ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் ...

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் தமிழக அரசு உத்தரவு

40
0
SHARE

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,ஆக.26&

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22& ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மரணம்

தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் டிசம்பர் 5&ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.இதனை தொடர்ந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்  பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்யக்கோரி சிலர் வற்புறுத்தியதால் பதவி விலகியதாக ஜெயலலிதா சமாதியில் அவர் அறிவித்தார்.

விசாரணை

பின்னர் சசிகலா சிறை செல்ல நேரிட்டது.எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.டி.டி.வி. தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாள ராக நியமிக்கப்பட்டார்.

.பி.எஸ். தலைமையிலான அணி..பி.எஸ் தலைமையிலான அணி, டி.டி.வி. அணி என்று அ.தி.மு..வினர் செயல்பட்டு வந்தனர்..பி.எஸ் தலைமையிலான அணியினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யவேண்டும் என்று தொடர்ந்து  வலியுறுத்திவந்தனர்.

முதல்வர்பேட்டி

கடந்தஆகஸ்ட்மாதம் 17& ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.

அவர்உடல்நலக்குறைவின்காரணமாகமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுசிகிச்சைபலனின்றி 5.12.2016 அன்று  உயிர் நீத்தார்.பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடமிருந்து மறைந்த முதல்வரின் இறப்பு குறித்த பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வந்தவண்ணம் உள்ளன.

மறைந்த முதல்வரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.இந்த விசாரணை கமிஷன் குறுகிய காலத்திற்குள் தனது பணியை முடிக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடந்து  கடந்த ஆகஸ்ட் மாதம் 21& ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் ஒன்றாக இணைந்தனர். அன்று அ.தி.மு.. தலைமை அலுவலகத்தில் ஒன்றாக இணைந்த பின்னர் அன்று மாலை ஒ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

இதனை தொடந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துமனையில் சிகிச்சை பெற்ற போது நாங்கள் அளித்த தகவல்கள் எல்லாம் பொய்எங்களை மன்னித்துவிடுங்கள் என்று பேசினார்

இந்தபேச்சு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்த முதல்வரின் மரணம் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதால் சி.பி.. விசாரணைக்கு  உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

டி.டி.வி. தினகரன் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் விசாரணை கமிஷன் கேட்டுக் கொண்டால் அளிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமியின்வாழ்க்கைகுறிப்பு

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கடந்த 28.4.1952 கோவையில் பிறந்தார். கோவை வடக்கு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் 1971&ம் ஆண்டில் பட்டப் படிப்பை நிறைவு செய்தார். 1974&ம் ஆண்டு சட்டக் கல்வி படித்து முடித்தார். பின்னர் கோவையில் வழக்கறிஞராக இருந்து 1986ம் ஆண்டு மாவட்ட முன்சீப் ஆனார். படிப்படியாக பதவி உயர்வைப் பெற்ற அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக 2009ம் ஆண்டில் பதவி ஏற்றார். 17.2.2010ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 28.4.2014 அன்று அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 2016ம் ஆண்டில் மும்பையில் உள்ள கடன் வசூலிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 21.3.16 அன்றில் இருந்து சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் நீதிப்பிரிவு உறுப்பினராக பணியாற்றினார். தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக் ஆணையத்தின்  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.