Home சினிமா குயின்படம் ‘பாரிஸ் பாரிஸ்’ என்று பெயர் மாற்றம் ஆனது

குயின்படம் ‘பாரிஸ் பாரிஸ்’ என்று பெயர் மாற்றம் ஆனது

25
0
SHARE

 மீடியன்ட் மனு குமாரன் மற்றும்லைகர்மனோஜ் கேசவன் இணைந்து  தயாரிக்கும், இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கும்பாரிஸ் பாரிஸ்திரைப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால்.

தயாரிப்பாளர் மனு குமாரன், “லைகர்மனோஜ் கேசவனோடு இணைந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.  இத்திரைப்படம், ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்துகுயின்என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் உருவாகும் இத்திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, நாயகனாக சஷி வருண் நடிக்கிறார்.

சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுய அடையாளத்தைக்   கண்டுகொள்கிறாள்.

இத்திரைப்படத்திற்கு இசை அமித் திரிவேதியிடமும், ஒளிப்பதிவு சத்யா ஹெக்டேயிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கலைக்கு குணா கென்னடியும், வசனங்கள் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதுகிறார்.  பங்கஜ் கபூருடன் இணைந்து கதை, திரைக்கதையை கவனித்து கொள்ளும் ரமேஷ் அரவிந்த், இத்திரைப்படத்தை அவர் தனித்து  இயக்குகிறார்.

முதல் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என நான்கு தென்னக மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிற இத்திரைப்படம், ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.    12.5 கோடி பட்ஜெட்டில் தயாரானகுயின்”, வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.