Home சிறப்புச் செய்திகள் நீங்கள் நினைத்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

நீங்கள் நினைத்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

54
0
SHARE

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவரை எல்லா நோய்களும் இலகுவாய் ஆக்கிரமித்துக் கொள்ளும். இந்தியாவில் இந்த சர்க்கரை நோய் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வருகிறது.

அகோரப்பசி, உடல் எடை குறைதல், கை கால் பாதங்களில் எரிச்சல், ஆண்மைக் குறைவு, தலை சுற்றல், அதிக தாகம், அடிக்கடி சிறுநீர்க் கழிப்பு, ஆறாத புண்கள், கண்பார்வை மங்குதல், பாதங்களில் சுளீர் சுளீர் என்று ஊசிகுத்துவது போல் வலி ஆகியவைகள் இருந்தால், சர்க்கரை நோய் என்ற அரக்கன் உங்களை தாக்குகிறான் என்று அர்த்தம்.

இந்த நோயால் பார்வை பழுதாகும். மாரடைப்பு, வாதம் வரும். வெறும் காலுடன் நடப்பதை தவிர்க்க வேண்டும், தினம் பாதங்களை பாதுக்காக்க வேண்டும், விரல் இடுக்குகளில் ஈரம், அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், விரல் நகங்களை அவ்வப்போது வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், ஏற்கனவே காலில் புண்ணுக்கு சிகிச்சை பெற்றவர்கள், டாக்டர் அறிவுரைப்படி கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.

சில சர்க்கரை நோயாளிகள் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் சுவிட்டுகளை ருசிப்பார்கள் இது தப்பு.

மேலும்தவிர்க்கவேண்டியபழங்கள்எவைஎன்பதைசர்க்கரைநோயாளிகள்தெரிந்துவைத்திருக்கவேண்டும். முக்கனிகளான மா, பலா, வாழையை தவிர்க்க வேண்டும். அத்துடன் சப்போட்டா, சீதாப்பழம், தேன் உலர்ந்த பழங்கள், வள்ளிக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மரவள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ஆகியவைகளை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும்.

மதுபானம், கரும்புச்சாறு, பனங்கற்கண்டு, பஞ்சாமிர்தம், லட்டு, சர்க்கரை பொங்கல், பாயாசம், ஜாம் கேக்குகள், வறுத்த பருப்புகள், வறுத்த இறைச்சி, மீன்,முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு, அப்பளம், வற்றல், பழஜூஸ், பாலாடை, உலர்ந்த திராட்சை, சாக்லேட், வெண்ணெய், நெய், பாமாயில், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் வேண்டவே வேண்டாம்.

இதற்கு சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம் என்பதை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  தக்காளி, கொய்யா, நாவல்பழம், மாதுளை, எலுமிச்சை, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், பப்பாளிக்காய், பாகற்காய், கத்திரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, வெண்டைக்காய், முட்டைகோஸ், முருங்கைகாய், கீரை, பூசணிக்காய், சுரக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, வெள்ளை முள்ளங்கி, காராமணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, குடை மிளகாய், வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, இஞ்சி, மிளகு, கடுகு, வெந்தயம், கொண்டைக் கடலை, கொள்ளு, கோதுமை, கேழ்வரகு, குதிரைவாலி தினை, சாமை வரகு, அரிசி, வெந்தயம் மோர், சுண்டைக்காய் வற்றல் ஆகியவைகளை தாராளமாக சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகளில் சிலர் தங்கள் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பதற்காக இன்சுலின் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் உண்ணும் உணவை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவில் சாப்பிட வேண்டும். கடுமையான உடற்பயிற்சி வேண்டாம். களைப்பை ஏற்படுத்தும் உடல் உழைப்பில் ஈடுபட கூடாது.

இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். ஊசிபோடும் இடத்தில் கட்டிகள் ஏற்படும். அதனால் ஊசிபோடும் இடங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்சுலின் அல்லது மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் சர்க்கரை அளவு குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம். சர்க்கரை அளவு குறையும் போது வியர்த்துக் கொட்டும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். கை கால்களில் நடுக்கம் ஏற்படும்.

சோர்வுஆட்கொள்ளும், தலைவலி மண்டையைப் பிளக்கும். சுயநினைவு நழுவி வலிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகும். அப்பொழுது உடனடியாக தேன் அல்லது குளுகோஸ், சாக்லேட் கொடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதத்தை தவிர்க்க வேண்டும். வயிறு முட்ட ஒரு வெட்டு வெட்டுவதற்கு பதில் இரண்டு மணி நேர இடைவெளிவிட்டு மூன்று தடவை சாப்பிடுவது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்றும், மருத்துவர்கள் கூறுகிறார்கள். நடைப்பயிற்சி நன்மைதரும். நன்மையும் தீமையும் பிறர்தர வாரா என்பது உண்மை. அதுபோல் அவரவர் ஆரோக்கியம் அவரவர் கையில் தான் உள்ளது.