Home சமையல் நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்  பயத்தம் பருப்பு சுண்டல்

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்  பயத்தம் பருப்பு சுண்டல்

12
0
SHARE

நவராத்திரி என்றாலே சுண்டல் தான் பிரதானம். சாயங்காலம் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரும் போது 9 நாளும் விதவிதமான சுண்டல்களை செய்து வீட்டிற்கு வரும் பெண்கள், சிறுமிகள் என அனைவருக்கும் நாம் கொடுப்பது நமது வழக்கம். அப்படி 9 நாளும் விதவிதமாக செய்ய வேண்டும் என்றால் எப்படி என்று தானே சிந்திக்கிறீர்கள்? கவலை வேண்டாம், ஒவ்வொரு நாளும் ஒவ்வோரு சுண்டல் செய்து அசத்துவோம்.

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு & 1/2 கப்

துருவிய தேங்காய் & 4 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் & தேவைக்கு ஏற்ப

உப்பு & தேவைக்கு ஏற்ப

தாளிக்க

எண்ணெய் & 1 டீஸ்பூன்

கடுகு & 3/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு & 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் & 2

கருவேப்பில்லை & 1 கொத்து

பெருங்காயம் & 2 சிட்டிகை

செய்முறை

3 கப் தண்ணீரில் பயத்தம் பருப்பை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். உடனே அதில் உப்பையும் சேர்க்கவும். இதை பதமாக எடுக்க வேண்டும், மிகவும் அதிகமாக வேகவும் கூடாது, வேகாமல் இருக்கவும் கூடாது.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். இதில் வெந்த பருப்பை போட்டு நன்றாக வதக்கவும். கடைசியாக துருவிய தேங்காயை அதில் சேர்த்து கலக்கவும். சுவையான பயத்தம் பருப்பு சுண்டல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here