Home சிறப்புச் செய்திகள் நூற்றாண்டு விழா காணும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

நூற்றாண்டு விழா காணும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

32
0
SHARE

உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு அதிர்ஷ்டம் அதாவது யோகம் இருக்கும். இருக்கிறது. பலரை பிரம்மா படைத்து விட்டு, அதிர்ஷ்டத்தை அழுத்தமாக எழுதுகிறான். சிலரை பிரம்மா சிருஷ்டித்து விட்டு, அதிர்ஷ்டத்தை அழுத்தமாகவும், ஆணியடித்து இறக்கி விடுகிறான்.

அதுபோல் ஆணியடிப்பது எல்லோருக்கும் அமையாது. 100 கோடியில் ஒருவருக்குத்தான் அமையும். அது போல் அமைந்ததில் ஒருவர்தான், நம் தமிழகத்தைச் சேர்ந்த, மண்ணின் மைந்தர் மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்.தான்.

எனக்குத் தலைவர் கருணாநிதி

நீங்கள் என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்ட எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதிதான். அது தெரியுமா எனக் கேட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது. பாலசுப்பிரமணியன் மாதிரி என்னைப் போன்றவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் குட்டு வாங்கியிருக்கிறோம் என சொன்ன அந்தப்பத்திரிகையாளர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்துத் தரச் சொன்னக் குறிப்புகளில் ஒரு இடத்தில் திருவாளர் கருணாநிதி என்று குறிப்பிட்டிருந்தேன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அந்தப் பத்திரிகையாளரை அழைத்துள்ளார். கலைஞர் என்று குறிப்பிடுங்கள் அல்லது கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிடுங்கள். கலைஞரைவிட இளையவர்கள் அவரை கலைஞர் என்றுதான் குறிப்பிட வேண்டும். அதுதான்மாண்புஎனச்

சொல்லியுள்ளார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை தன்னுடைய அனுபவத்தில் வெளிப்படுத்தியவர் மூத்தப்பத்திரிகையாளர் சோலை.

எம்.ஜி.ஆருக்காக கட்சியில் இருந்தேன்

1972&ம் ஆண்டு தி.மு.. சார்பில் தேனி சட்டமன்றத் தொகுதியில், சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்த உறுப்பினர், இந்தியாவிலேயே தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றவர். அவர்தான் இலட்சிய நடிகர் எனப் பெயர் பெற்ற எஸ்.எஸ்.இராஜேந்திரன் ஆவார்.

.தி.மு..வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருக்கின்றவரை, அவரின் அரவணைப்பு இருந்தது. அவரை விடக் கூடுதலாக ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற போதும் என்னைப் பாராட்டினார் எம்.ஜி.ஆர். கோட்டையில் அமைச்சரவையில் என்னை பொறுப்பு எடுத்துக்கச் சொல்லி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கேட்ட போது மறுத்தேன். சென்னையில் பிலிம்சிட்டி உருவான போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பேசினேன்.

எம்.ஜி.ஆரின் செல்லப் பெயர் 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் முழுப்பெயர், எம்.ஜி.ராமச்சந்திரன் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு, அவரை எம்.ஜிஆ.ர். என்று மூன்றெழுத்தாகச் சுருக்கி சுருக்கமாக அழைக்கப்பட்டார். அவரது அபிமானிகள் அவரை பல பட்டங்களில் அழைத்து வந்தனர். அதே நேரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அவரது இல்லத்திலேயே ஒரு செல்லப் பெயர் இருந்தது. கடந்த 1988&ம் ஆண்டு மதுரைக்கு வந்த திருமதி ஜானகி ராமச்சந்திரன், கொடை ரோடு ஸ்டேஷனில் சில குழந்தைகளுக்குப் பெயர் சூட்டச் சொன்னபோது, அவர் சூட்டிய பெயர்களில் ராமு என இரண்டு குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார்.ராமு என்ற பெயரில் அவருக்கு என்ன ஈர்ப்பு எனக் கேட்டால், புரட்சித் தலைவரை அவரது, தாயார் ராமு என்றுதான் செல்லமாக அழைப்பார்களாம்.

13 நாடகம் பார்த்த எம்.ஜி.ஆர்.        

காவல்காரன் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், நடிகர் ஆர்.எஸ்.மனோகருக்கும் பாக்ஸிங் சண்டை நடக்கும். அதில்தான் படமே துவங்கும். ஆர்.எஸ். மனோகரைப் பார்த்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உங்களுக்கு பாக்ஸிங் தெரியுமா எனக் கேட்டுள்ளார். ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என மனோகர் தெரிவித்துள்ளார். இரண்டு, மூன்று ஷாட்கள் முடிந்திருக்கும், மனோகர் பஞ்ச் கொடுப்பது, எம்.ஜி.ஆர்.குத்த வரும் போது தடுப்பது, மனோகர் டெக்னிக் எல்லாம் பார்த்து, ஏன்யா பொய் சொல்றே பெரிய சாம்பியன் மாதிரி பைட் பண்றே என்று சிரித்துக் கொண்டே செல்லமாக எம்.ஜி.ஆர். பஞ்ச் பண்ணியுள்ளார்.

பைட் சீன்களை மிகுந்த கவனமாகவும், அக்கறையோடும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படமாக்குவார். சென்னை என்.கே.டி.கலா மண்டபத்தில் 13 நாட்கள், தொடர்ந்து ஆர்.எஸ். மனோகரின் 13 நாடகங்கள் நடந்தது. அந்த 13 நாட்களும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வந்து 13 நாடகங்களையும் பார்த்துள்ளார். ஒரே நேரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதிகமாக நாடகங்களைப் பார்த்தது ஆர்.எஸ்.மனோகர் நாடகங்களைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த நாடக விழாவில், இறுதியில் நாடகக் காவலர் என்ற பட்டத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர்.ஏலம் விட்ட தங்கவாள்      

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.வாள் சண்டையில் வல்லவர் என்பது ஊர் அறிந்த விஷயமாகும். அதுமட்டுமல்ல, நடிகர்களில் முதலில் தங்கவாள் பெற்ற ஒரே நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். அதே போல தெய்வத்திற்கு வைரவாள் பரிசளித்த நடிகரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் என்பது குறிப்படத்தக்கது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதன்முறையாக சொந்தமாகத் தயாரித்து, நடித்து, இயக்கிய திரைப்படம் நாடோடி மன்னன் திரைப்படம்தான். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் அனைவருக்குமே தெரியும். மதுரையில் படத்தின் வெற்றி விழா கொண்டாடிய மதுரை முத்து, 110 சவரனில் தங்கவாள் செய்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பரிசளித்தார். அதன் பிறகு, இந்திய சீனப்போரின், அந்தத் தங்கவாளை ஏலம் விட்டு, அந்தத் தொகையைத் தேச பாதுகாப்பு நிதிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கினார்