Home அரசியல் ஐ.நா. சபையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரை டுவிட்டரில் நன்றி சொன்ன ராகுல்

ஐ.நா. சபையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரை டுவிட்டரில் நன்றி சொன்ன ராகுல்

9
0
SHARE

புதுடெல்லி, செப். 25

.நா. சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நிகழ்த்திய உரைக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

.நா. வின் 72வது பொதுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். இந்தக் கூட்டதில் பேசிய சுஷ்மா, “இந்தியாவும் பாகிஸ்தானும் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன.

இந்தியா ஐ..டி., ..எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. ஆனால் நீங்கள்(பாகிஸ்தான்) தீவிரவாத இயக்கங்களை உருவாக்கினீர்கள்.

நாங்கள் மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கும் போது நீங்கள் தீவிரவாதிகளையும், ஜிகாதிகளையும் உருவாக்கினீர்கள். மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுவார்கள். ஜிகாதிகள் கொலை செய்வார்கள்என்றார்.

இந்த உரை குறித்து காங்கிரசின் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மாவுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். அதில் அவர், “..டி., ..எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சுஷ்மா அங்கீகாரம் அளித்ததற்கு நன்றிஎனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here