Home சிறப்புச் செய்திகள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க பழங்குடிகள் வாழ்வில் தமிழர் மரபுஅமெரிக்கப் பழங்குடிகளில் தமிழர் மரபு

40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க பழங்குடிகள் வாழ்வில் தமிழர் மரபுஅமெரிக்கப் பழங்குடிகளில் தமிழர் மரபு

46
0
SHARE

 கொண்டாடும் தமிழச்சிகள்:

உலகை வணிகத்தால் கட்டமைத்த அமெரிக்காவை கண்டுப்பிடித்தது கொலம்பஸ் என வரலாறு கூறுவதுண்டு. ஆனால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492&ல் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைவதற்கு முன்னரே தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறினர் என கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவிக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ” ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492&ல் இந்தியர்களை கண்டுபிடிக்க கடல் வழிப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது, அட்லாண்டிக் கடற்கரை வழியான பயணத்தில் அமெரிக்கை என்ற மலை அருகில் செவ்விந்தியர்களை கண்டறிந்தார். அதனையே, அமெரிக்கா என வரையறுத்து, அமெரிக்கர்களை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதனையடுத்து, ஐரோப்பியர்கள் 1,500ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடல் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்த பல பழங்குடிகளின் வரலாற்றை மறைத்து அமெரிக்க நாகரீகத்தை உருவாக்கினார்கள். ஆனால், அமெரிக்காவில் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளாக இருந்த அமெரிக்க பழங்குடியினருடன் தமிழர்கள் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளனர்.

இதனை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரின் வரலாற்றில் தமிழர்கள் தொன்மம் ஏராளம் நிறைந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாறை ஓவியங்களில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களின் வரலாறு பதிந்துள்ளது. இங்குதான் அமெரிக்காவிலேயே அதிகமான பாறை ஓவியங்கள் உள்ளன. அலமேடா (கிறீணீனீமீபீணீ) என்னும் ஊர், ‘மரங்கள் சூழ்ந்த நிழற்பகுதிஎன்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது.

இந்தப் பெயர்ஆலமர மேடுஎன்பதில் இருந்து மருவி இவ்வாறு உருவாகியுள்ளது. முருங்கைக் கீரை விஷீக்ஷீவீஸீரீணீ றீமீணீயீ என்ற பெயரிலேயே விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செம்பருத்தி செடி, அரளி செடி மற்றும் நார்த்தங்காய் செடிகள் கலிஃபோர்னியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் உள்ளது. சான்டா பார்பரா பகுதியில் வாழ்ந்த சுமாஸ் ( சிலீuனீணீsலீ) பழங்குடிகளின் இன்றைய தலைமுறையினர் ஆமைப் படத்தை தங்கள் கொடியில் வைத்துள்ளார்கள். கடல்சார்புடன் தொடர்புடையவர்கள் பழங்குடியினர் என்பதை விளக்கும் வகையில் இது உள்ளது. உலகிற்கு முதன் முதலில்சோழியைபணமாக அறிமுகப்படுத்தியவர்கள் பாண்டியர்கள் தான். அந்தச் சோழியின் ஆங்கிலப்பெயர் கவுரி என கொள்ளப்படுகிறது.

தமிழ் இலக்கியங்கள் பாண்டியர்களை கவுரியர்கள் என்று ஆவணப்படுத்தி உள்ளது. இதன் மூலம், ஆப்ரிக்கா முதல் அமெரிக்கா வரை கவுரியை காசாக அறிமுகப்படுத்தியர்கள் பாண்டியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள்  மாக்கல் கொண்டு செய்யப்பட்ட சமையல் கலன்களை பயன்படுத்தியது போல், கலிபோர்னியாவின் கேடலினா தீவில் வாழ்ந்த பழங்குடிகள் ( நிணீதீக்ஷீவீமீறீவீஸீஷீ) மாக்கல்லினால் சமையல் கலன்கள் செய்து பயன்படுத்தினார்கள்.

பழங்குடிகள் தங்களின் வழிபாட்டு இடத்தில் தமிழர்களை போன்று சூரியன் மற்றும் சந்திரன் படங்களையும் வரைந்து வைத்துள்ளனர். இவர்களின் நம்பிக்கைகளில் காக்கை, ஆந்தை மற்றும் பருந்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பெண்கள் பூக்களை தலையில் சூடியும், கழுத்தில் சுற்றியும்  (பிணீஷ்ணீவீவீணீஸீ றீமீவீs போன்று),  காதுகளில் வைத்தும் தமிழச்சிகளை போன்று அழகுபடுத்தி வருகின்றனர்.

யோகுட் ( சீஷீளீut) என்ற பழங்குடிகளின் ஒரு குழு, தங்களின் உட்பிரிவுகளுக்கு பறவை மற்றும் மிருகங்களின் பெயரை வைத்திருக்கிறார்கள். தாஹோ ( லிணீளீமீ ஜிணீலீஷீமீ) பகுதியில் வாழ்ந்த கீணீsலீஷீமீ குடியினர் பயன்படுத்தும் ஊதும் இசைக்கருவி புல்லாங்குழல் போன்றே உள்ளது. தமிழர்களின் நாட்டார் கலையின் முக்கிய இசைக்கருவியான பறையை போன்று பழங்குடிகளின் மற்றொரு இசைக் கருவி  உள்ளது. பழங்குடிகளின் கழுகாட்டம் நம்மூர் மயிலாட்டத்தை போன்று உள்ளது.

அமெரிக்க பழங்குடியினரும், தமிழர்களும் ஒன்றோடு, ஒன்றிணைந்து தொடர்பு கொண்டவர்கள் என்பதை விளக்கும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்களின் குடும்பத்தினர் பெயரில், தமுழிபாஸ்( ஜிணீனீணீuறீவீஜீணீs) தமயன்(tலீணீனீவீஹ்ணீஸீ), (tணீனீனீuளீணீ/tணீனீநீணீஸீ), சாலினன்(sணீறீவீஸீணீஸீ), பயட்டு (ஜீணீவீutமீ),  யானை(ஹ்ணீஸீணீ), முகவாய் (னீஷீலீணீஸ்மீ). ஈழம் (ஹ்மீறீணீனீu), தொலைவு (tஷீறீஷீஷ்ணீ), தொங்குவன் (tஷீஸீரீஸ்ணீ), (தெற்கு )மேடு, (sஷீutலீமீக்ஷீஸீ னீணீவீபீu). இப்படி பல தமிழ் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அரிசோனாமாகாணத்தில்வாழ்ந்தநவகோபழங்குடியினர்உணவுமுறையில்அரிசி, தினை, வள்ளிக்கிழங்கு,சோளம் வகைகள் போன்றவை பழந்தமிழர் உணவு முறையோடு ஒத்துப்போகின்றது. அரிசோனாவுக்கு மேற்கே இருக்கும் சான் பிரான்சிஸ்கோ ஜீமீணீளீ  ல் தனது முன்னோரின் ஆன்மா வசிப்பதாகவே நம்புகிறார்கள். முக்கியமாக  அந்தச் சிகரங்களில் ஒன்றான அகத்தியர் சிகரம் கிரீணீக்ஷ்க்ஷ்வீs ஜீமீணீளீ நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவர்கள் புல்லாங்குழலும் பயன்படுத்தி உள்ளனர். அப்பாச்சி அப்பன், ஆச்சி என்னும் பழங்குடியினர் சூரிய,சந்திரனின் பயணங்களைத் துள்ளியமாக கணித்து தமது விவசாயத்தை நடைமுறைப்படுத்தினர்.இவர்களின் இயற்கை வழிபாடு,மூதாதையர் வழிபாடு, பூமியைப்பேணும் முறை பழந்தமிழர் வாழ்க்கையை நினைவு படுத்துகிறது.

   விஸ்கான்சின் மாகாணத்தின் மிகப்பெரிய பழங்குடியினர் சிவீஜீஜீவீஷ்ணீ சிப்பிவா/   ( மனோன்மணி).  அவர்களின் ஏழு மிகி தெய்வங்களில் (ஏழு சித்தர்கள் வழிமுறையை பின்பற்றியதாகத் தெரிகிறது. ) ஒன்று இவர்களுக்கு வெள்ளை இனத்தவரால் துன்பம் வரும் என்றும் மேற்கு நோக்கி நகரவும் உத்தரவிட்டதால் ஆதியில் வாழ்ந்த அமெரிக்க கனடா நாடுகளின்கிழக்குக்கரையோரமான கியூபக் எல்லையில் இருந்து (ஷிணீவீஸீt லிணீஷ்க்ஷீணீஸீநீமீ க்ஷீவீஸ்மீக்ஷீ,ஷீttணீஷ்ணீ க்ஷீவீஸ்மீக்ஷீ,லிணீளீமீ ழிவீஜீஜீவீsவீஸீரீ ணீஸீபீ tலீமீஸீ tஷீ tலீமீ ரீக்ஷீமீணீt றீணீளீமீs ஷீயீ ஷ்வீsநீஷீஸீsவீஸீ)மேற்கு நோக்கி நகர்ந்து விஸ்கான்சின் வந்தடைந்தனர். அப்படி அவர்கள் சென்ற இடங்கள் ஆமை வழித்தடங்கள். கிக்ஷீவீளீணீக்ஷீணீ (ஏரிக்கரை) என்னும் விவசாயப் பழங்குடியினர் ழிஷீக்ஷீtலீ ஞிஷீளீணீtஷீவில்வாழுகின்றனர்

இதில் இன்னும் ஆச்சரியமாக, பிலிப்பைன்ஸ் தீவுகளில் இர்ந்து சிங்கப்பூர் வரை பல இடங்களில் ஆமைகள் வசிக்கும் ஆமைத்தீவுகள் உள்ளது. இந்த தென்கிழக்கு ஆசியா தீவுகளுக்கு சீனர்கள் ஆசிய தென்கரை என்ற பெயரை தமிழ் பெயரிலே வைத்துள்ளனர். இதிலிருந்து, தமிழர்கள் தென் கிழக்கு ஆசிய பகுதிகளின் வழியாக கடல் நீரோட்டத்தில் வலசை பயணம் செய்யும் ஆமைகள் வழியாக முதலில் கட்டுமரம், தெப்பம், மிதவை போன்றவைகளில் ஒரு வழிப் பயணம் செய்து, பின்னர், பாய் மரங்களை பயன்படுத்தி இருவழி பயணத்தை துவக்கி துவக்கி வைத்த திரைமீளர்களாக காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கும், அமெரிக்க பழங்குடியினருக்கும் இடையிலான பல நூறு ஒற்றுமைகளை விளக்கும் வகையில், அமெரிக்காவில் பல கடற்கரை மாநிலங்களி  கடந்த 60 வருடங்களாக பழங்குடியினர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 4ம் வெள்ளியன்று இந்நாள் கொண்டாடப்பட்டு  வருகிறது. அதன்படி, கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கும்தொல்லியல் கற்போம்‘, பெண்கள் இணைய குழுவும் பழங்குடியினர் நாள் இன்று கொண்டாடுகிறார்கள்.  அமெரிக்காவின் பழங்குடிகளில் கலந்து இருக்கும் தமிழர்களின் மொழி, மரபு, பண்பாடு, கடலோடும் தன்மையை நினைவுப்படுத்தும் வகையிலே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவின் தமிழ் மக்களின் வாழ்வியலில் அமெரிக்கா என்பது பிழைப்புக்காக சென்ற இடம் என்ற மன நிலை கொண்டுள்ளனர். அமெரிக்காவின் வரலாறு, பண்பாடு இவற்றில் இன்றளவும் ஈடுபாடு கொள்ளாமல், தாம் சென்ற தாய்நாட்டையே நினைத்த வண்ணம் உள்ளார்கள்.

உலகம்முழுவதும்கடலில்சென்றுதிரைமீளர்களாகதிரும்பிவந்ததமிழர்களுக்குஅமெரிக்கமண்ணில்ஊடுருவியுள்ளதமிழரின்வரலாற்றைதெளிவாகசொல்லஅமெரிக்காவில்வசிக்கும்தமிழ்பெண்களின்தொல்லியல் கற்போம்என்ற இணைய குழு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரிமாண்ட் என்ற ஊரில் வசிக்கும் ஆசிரியை சத்தியா நடராஜன், தமிழ் ஆர்வலர்கள் கனகலட்சுமி, பிரியா, சவுந்திர நாயகி, சுகந்தி, ரேணுகா தேவி, செந்தாமரை, லஷ்மி மற்றும் பலர் அந்நாட்டின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பழங்குடி மையங்கள் போன்றவற்றில் இருக்கும் அமெரிக்க பழங்குடி வரலாற்றில் உள்ள தமிழரின் தொன்மையை தேடி வருகிறார்கள்.

இதுபோன்று உலக அளவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் குழு மூலம், இந்தோபசுபிக் கடல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், பிலிஃபைன்ஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா, வியட்நாம், சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் ஆசியாவின் கடைக்கோடியில் உள்ள ரஷ்யாவின் காம்சட்கா போன்ற இடங்களில் இருந்து நீண்ட பசுபிக் பெருங்கடலை கடந்து அலாஸ்கா, கனடா மேற்கு வட அமெரிக்கா, மெக்சிக்கோ, கிருத்தமாலா, நிகாரிகோவா, பெரு, சிலி, அர்ஜெண்டினா வரை உள்ள கடற்கரைகளில் ஊடுருவி உள்ள தமிழர் பண்பாட்டை இடப்பெயர் மக்களின் பெயர், மரபு, பண்பாடு, நாட்டார் வழக்கியல், கடலோடும் தன்மை, இயற்கையின் மரங்கள், உயிரினங்கள், பெயர்களை ஒப்புமை செய்து, நீரோட்டங்களில் ஆமைகளின் வழித்தடத்தை பின் தொடர்ந்து, காற்றையும், கடல் நீரோட்டத்தையும் புரிந்துக்கொண்டு, புலம் பெயர்ந்த பழங்கற்கால மக்களின் கடலோடிய தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்.

நான் தனி ஒருவராக பல வருடங்களாக செய்த ஆய்வை வயது கருதி குழுக்களை உருவாக்கிக் கொண்டு அந்தெந்த நாடுகளில் உள்ள மக்களின் மனதில் தமிழர்களின் புரிதலை ஏற்படுத்த முயன்று வருகிறேன். அதனுடன், அறிஞர் சாமன்லால், எழுத்தாளர்கள் கி.மனோகரன், சீனிவாசன், ராமநாதன் கடந்த 1940களில் இந்தியவியல் கட்டுரைகளில் தமிழர்களின் பண்பாடுகள் மெக்சிகோ நாட்டில் இருப்பதை அடையாளப்படுத்தியுள்ளது, முக்கியமாக, அமெரிக்காவில் உள்ள பலஅருங்காட்சியகங்களில் தமிழர்களின் கலைப்பொருட்கள் பல ஆயிரக்கணக்கில் இருப்பதை, சிலை கடத்துபவர்கள் கொடுக்கும் வாக்குமூலம் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது, தமிழகத்தின் வரலாற்றை மீட்பதற்கு பெரும் முயற்சியாக அமையும். அமெரிக்காவில் பழங்குடியினர் நாளை கொண்டாடி, தமிழருக்கும், அமெரிக்க பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், உலக அளவில் 183 நாடுகளில் தமிழர்களுக்கும், அந்நாட்டின் பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் தமிழர்கள் ஒன்றிணைந்து பழங்குடியினர் நாள் கொண்டாட வேண்டும். இதன் மூலம், தமிழர்களின் கடல்சார் வரலாற்றை மீட்டு, தமிழர்களின் உண்மை வரலாற்றை உறுதிப்படுத்த வேண்டும்என்கிறார் கடல் சார் தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு.